பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பிரபல ஆன்-லைன் டிஜிட்டல் மியூசிக் நிறுவனம் ஷாவன். இந்தி, மராத்தி, தமிழ் என பல்வேறு மொழிகளில் சுமார் 3 மில்லியன் பாடல்கள் இந்த இணையதளத்தில் இருக்கின்றன. இந்நிலையில் ஷவான் நிறுவனத்தின் தூதராகி இருக்கிறார் பிரபல இந்தி நடிகர் ரன்பீர் கபூர். இந்தியாவில் இந்நிறுவனத்தை பிரபலப்படுத்தும் விதமாக ரன்பீர் ஒரு விளம்ப படம் ஒன்றில் நடித்து இருக்கிறார். வாசன் பாலா என்பவர் தான் இந்த விளம்பரத்தை இயக்கி இருக்கிறார். இவர் ரன்பீர் கபூருடன் பாம்பே வெல்வெட் போன்ற படங்களில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியவர். இதுப்பற்றி ரன்பீர் கபூர் கூறுகையில், கடந்த ஓராண்டுக்கு மேலாக ஷாவன் ஆன்லைன் இசையை பயன்படுத்தி வருகிறேன். இப்போது அந்நிறுவனத்தின் தூதராக நியமிக்கப்பட்டு இருப்பது கூடுதல் சந்தோஷம். ஷாவன், இசையை அடுத்த பரிணாமத்திற்கு கொண்டு செல்லும் ஒரு நல்ல ஆன்லைன் மியூசிக் தளம் என்றார்.