ஏ.கே.எஸ்.மணியாதவ் புரொடக்ஷன் சார்பில், சுப்ரமணியம் தயாரிக்கும் புதிய படம் விபுணன். படத்தின் நாயகனாக சஞ்சய் நடிக்க அவருக்கு ஜோடியாக வாசுகி நடிக்கிறார். இவர்களுடன் மகாநதி சங்கர், ரேகா, முத்துக்காளை, நெல்லை சிவா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். பத்திரிகையாளராக இருக்கும் ஒரு இளைஞன் நாட்டில் நடக்கும் சமூக அவலங்களை கண்டு கொதித்து எழுகிறான். அதனால் அவன் சந்திக்கும் பிரச்னைகளே படத்தின் கதை.
காதல், ஆக்ஷ்ன் கூடவே சமூக பிரச்னைகளையும் சேர்த்து இப்படத்தை இயக்குகிறார் எஸ்.கார்த்திக்கேயன். ஜேக்கப் சாமுவேல் இசையமைக்க, ஏ.என்.அருண் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை, சித்தூர், திருத்தனி உள்ளிட்ட பகுதிகளில் சூட்டிங் நடந்து வருகிறது.