Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

ஓடுதளம்

ஓடுதளம்,Oduthalam
  • ஓடுதளம்
  • ஸ்ரீஜித்
  • ரூபிகா
  • இயக்குனர்: தினேஷன்
01 அக், 2012 - 13:29 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » ஓடுதளம்

சி.ஆர்.கே.கிரியேஷன்ஸ் சார்பில் புதுமுகங்கள் நடித்து வரும் புதியபடம் "ஓடுதளம்". சின்ன வயதில் நண்பனும், தோழியுமாக பழகிய ஒரு ஆணும், பெண்ணும் காலப்போக்கில் எதிரிகளாக மாறுகிறார்கள். நண்பனின் மகனும், தோழியின் மகளும் நட்பாக பழகி, காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களை கொல்வதற்கு இருவரும் துரத்துகிறார்கள். காதலில் ஜெயிப்பதற்காக, அந்த இளம் ஜோடி ஓடுகிறது. இப்படி காதலும், நகைச்சுவையும் கலந்து ஓடுதளம் படம் தயாராகிறது.

படத்தின் நாயகனாக புதுமுகம் ஸ்ரீஜித்தும், நாயகியாக ரூபிகாவும் நடிக்க இவர்களின் அப்பா, அம்மாவாக ஆதித்யா மேனனும், ஐஸ்வர்யாவும் நடிக்கின்றனர்.ரமேஷ் நாராயணன் இசையமைக்க, முரளிராமன் ஒளிப்பதிவு செய்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார் தினேஷன். சி.ஆர்.கே.கிரியேஷன்ஸ் சார்பில் பாபு கவலேகர், ராஜீ நம்பியார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். கோவாவில் 20 நாட்கள் சூட்டிங் நடந்து முடிந்துள்ளது. அடுத்தகட்ட சூட்டிங் சென்னையில் நடைபெற இருக்கிறது.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap