ஆர்.கே.மூவி இண்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கும் படம் தலபுள்ள. இப்படத்தின் நாயகன், நாயகியாக புதுமுகங்கள் கிரண், தீபா நடிக்கின்றனர். இவர்களுடன் ஏராளமான புதுமுகங்களும் இணைந்து நடித்துள்ளனர். நகரத்தில் படித்தவனுக்கு பட்டணத்துப் பெண் மீது மோகம் வருவதும், கிராமத்துப் பெண்ணுக்கு பட்டம் படித்தவன் மேல் காதல் வருவதும் இயல்புதான். அப்படி ஒரு கிராமத்துப் பெண்ணுக்கு நகரத்தில் படித்த தன்னுடைய முறை மாப்பிள்ளையுடன் திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்தில் முறை மாப்பிள்ளைக்கு சம்மதமில்லை. இந்தச் சூழலில் நகரத்திற்கு திருமணம் முடித்து, ஆசை ஆசையாய் வரும் புதுப்பெண்ணுக்கு தன்னுடைய மாமனைப் பற்றிய ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது. அது என்ன? என்பதுதான் "தலபுள்ள படத்தின் கதை. இப்படத்தை திரைக்கதையை எழுதி, இயக்கியிருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்களான ராம்-மஸ்தான். திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.