பணத்திற்காக எதையும் செய்யும் ரவுடி ஒருவன் வக்கீலுக்கு படித்த பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொள்கிறான். அவள் அவனைத் கொஞ்சம் கொஞ்சமாக திருத்துகிறாள். மனம் திருந்தும் அவன் மகாத்மா என்னும் புதிய கட்சியை ஆரம்பிக்கிறான். இதன் காரணமாக அவனுக்கு எதிராக உருவாகும் எதிரிகளை எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் புதிய தளபதி படத்தின் கதை. தெலுங்கு ஹீரோ ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்திருக்கிறார். பாவனா, ஷார்மி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். தெலுங்கில் பல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் கிருஷ்ண வம்சி இப்படத்தை இயக்கியிருக்கிறார். விஜய் ஆன்டனி இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களில் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.