நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும் காதல் கிசுகிசு, குண்டக்க மண்டக்க போன்ற படங்களை தயாரித்தவருமான பிரபல ஒளிப்பதிவாளர் எம்.கேசவன், சூப்பர் ஸ்டார் ஆர்ட் மூவி பிரைவேட் லிட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் மெய்யாலுமே பொய்.
சுபாஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மற்றொரு நாயகனாக ருக்மன் நடிக்க, கேரளாவை சேர்ந்த நீனு கார்த்திகா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர் தெலுங்கில் ஒரு படத்திலும், மலையாளத்தில் 2 படங்களிலும் நடித்துள்ளார். டைரக்டர் குணசேகர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் நெப்போலியன் நடித்த 'மாமனிதன்' என்ற படத்தை இயக்கியவர். மலேசியாவை சேர்ந்த அமிகோ சுகு இசையமைக்கிறார். இவர் பிரபல பாப் இசை குழுவான யோகி பி., குழுவில் கம்போசராக பணியாற்றியவராம். இந்த படத்தின் சூட்டிங்கை லண்டன், பாரீஸில் நடத்தி திட்டமிட்டிரக்கிறார்கள்.