அஜாஸ்
அனாகா ஜீ-அன்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் எனும் கம்ப்யூட்டர் நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் விழியில் விழுந்தவள். நாயகனாக அஜாஸ் அறிமுகம் ஆகிறார். இவருக்கு ஜோடியாக ஷில்பா, அனாகா ஆகிய இருநாயகிகள் நடிக்கின்றனர்.
காதலுக்காக தன் நிலைகளை மாற்றிக்கொண்டு, வெவ்வேறு பரிமாணங்களாக தன்னை உருவாக்கிக் கொள்ளும் ஒரு இளைஞனின் வாழ்வில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட காதல் கதைதான் இப்படத்தின் கரு. நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் கலந்த படமாக உருவாகிறது. படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெறுகிறது. அதில் இரண்டு பாடல்கள் அயல் நாடுகளில் படமாக்கப்பட உள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் பொல்லாக். இதில் இசையமைப்பதன் மூலம் முதல் முதலாக அறிமுகமாகிறார். இப்பாடல்களுக்கு அனுராதா ஸ்ரீராம், பின்னி, ஸ்வேதா ஆகியோர் பாடியுள்ளனர்.
கதை, திதைக்கதை வசனம்: அஜாஸ், ஒளிப்பதிவு: பிஜூ, இசை: பொல்லாக், பாடல்கள்: ரகு, நடனம்: ஹபீப்.