இயக்குநர் : பி, பன்னீர் செல்வம்
பாடல் மற்றும் இசை : குஹா
மாணவர்கள் படிக்க வேண்டிய வயதில் நன்றாக படிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மற்ற தவறான விஷயங்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி இப்படம் விளக்கியுள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை விளக்குவதாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது. மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய ஜனரஞ்சகமான படம். இன்றைய காலகட்டத்திற்கு இதுபோன்ற படம் மிக பயனுள்ளதாக இருக்கும். இப்படம் மாணவர்களுக்கும், மாணவர்களின் பெற்றோர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும். தணிக்கை குழுவினரால் யூ சான்றிதழ் பெற்றுள்ளது.
ஜனா, ஆதித்யகிருஷ்ணா எனும் 2 புதுமுகங்கள் அறிமுகமாகியுள்ளனர். அனுகிருஷ்ணா, தேவதர்ஷினி, கானாபாலா, மீராகிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.