விமல்ராஜா என்ற புதுமுகத்துடன் கதிர், கஞ்சா கருப்பு நடிக்கிறார்கள். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளியில் படித்த பித்வய் சிவசங்கர் இசை அமைக்கிறார்,
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.அண்ணாத்துரை.
"ஹீரோ விமல்ராஜா, கதிர், கஞ்சாகருப்பு மூன்று பேரும் இரவு நேரத்தில் சினிமா போஸ்டர் ஒட்டுகிறவர்கள். அவர்களை ஒரு கூலிப்படை தங்களுக்கு சாதகமாக ஒரு வேலைக்கு பயன்படுத்துகிறது. அந்த வேலை முடிந்ததும் மூவருக்கும் பெரும்தொகை கிடைக்கிறது. போஸ்டர் ஒட்டி எதுக்கு கஷ்டப்படணும் இந்த வேலையை செய்யலாமே என்று கூலிப்படையாக மாறுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை எங்கு நோக்கி போகிறது என்பதுதான் கதை. இன்றைக்கு எல்லா வேலைக்குமே கூலிப்படை இருக்கிறது. உங்களுக்கு தெரியாமல் ஒரு கூலிப்படை உங்களை சுற்றி இருக்கிறது என்பதை உணர வைப்பதுதான் கதை. நெல்லை, கேரளா, சென்னை, சேலம் பகுதிகளில் படமாகி உள்ளது. வருகிற 20ந் தேதி வெளிவருகிறது. என்கிறார் இயக்குனர் அண்ணாத்துரை.