Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

ரீங்காரம்

ரீங்காரம்,Reengaram
27 டிச, 2014 - 17:09 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » ரீங்காரம்

ஹரி இயக்கிய சேவல் வெற்றிப் படத்தை தயாரித்த ஜே ஸ்டுடியோஸ் ஜின்னா தயாரிக்கும் படம் ரீங்காரம்


படத்தை இயக்குபவர் சிவகார்த்திக். இவர் சமுத்திரக்கனி, பாலசந்தர்,மூர்த்தி , அரசுசுரேஷ், எசி.ஜே.பாஸ்கர் என பல இயக்குநர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த பரந்துபட்ட அனுபவம் பெற்றவர்.


ஒளிப்பதிவு- இனியன் ஹரிஸ், இசை--அலிமிர்ஷா. இவர் ,ஆதார் ,சமுத்திரக்கனி நடிக்கும் புத்தனின் சிரிப்பு படங்களின் இசையமைப்பாளர்.

பொருட் செலவு, பிரமாண்டங்கள் மத்தியில் மனதைத் தொடும் கதைகளும் காட்சிகளுமே வெற்றி பெறும்; பேசப்படும் .அந்த வகையில் உணர்வுகளின் உன்னதம் பேசும் படம்தான் ரீங்காரம்


இது வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவம். அதைப் பின்னணியாக வைத்து திருச்சியைக் கதைக் களமாக வைத்து படம் உருவாகியிருக்கிறது.


படத்தின் கதையை விட அதன் திரைக்கதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டே படம் தயாரிக்க முன்வந்ததாகக் கூறுகிறார் தயாரிப்பாளர் ஜின்னா.விடுகதையைப்போல இதன் திரைக்கதையை உணர்ந்ததாகவும் விடைஅறியும் ஆர்வத்தை சுவாரஸ்யமான காட்சிகள் ஏற்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.


இது ஒரு நாளில் நடக்கும் கதை. கதையின் விறு விறுப்புக்கும் வேகத்துக்கும் வேகத்தடை வேண்டாம் என்று படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள்தான் . அதில் ஒன்றை குட்டிப்புலி அருவா மீச புகழ் பத்மலதா பாடியுள்ளார்.


பாலா என்கிற புது முகம் நாயகன். பிரியங்கா தான் நாயகி. கலாபவன் மணி, ஆடுகளம் ஜெயபாலன் போன்றோரும் நடித்துள்ளனர்.


ஜெயபாலன் இருட்டில் வாழும் பூதமாக வித்தியாச வேடம் தாங்கியுள்ளார். வில்லனாக கலாபவன் மணி நடித்துள்ளார். விஜய்டிவிபுகழ் சிங்கப்பூர் தீபன் நகைச்சுவை நடிப்பில் சிரிக்க வைப்பார்


படத்தில் மலிவான காமெடி இல்லை.மனதிற்குள் ரசிக்கும் காமெடி உண்டு.


இது புதிய கதை இல்லை எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் கோணங்களில் வித்தியாசப் படுத்திக் காட்டியிருப்பதாக இயக்குநர் கூறுகிறார்.


படம் பற்றி இயக்குநர் கூறும் போது, "மனிதன் அவன் வாழ்நாளில் கடக்கிற ஒட்டு மொத்த உணர்வுகளையும் நிகழ்வுகளையும் இரண்டே விஷயத்தில் தெளிவாகச் சொல்லி விடலாம். ஒன்று சிரிப்பு இன்னொன்று அழுகை. இந்த இரண்டு விதமான உணர்வுகளையும் சரிவர பயணம் செய்து பார்த்த மனிதர்களிடமிருந்தும் படித்த புத்தகங்களிடமிருந்தும் எடுத்து சொல்லியிருக்கிறேன். இதை ஓர் அனுபவமாக உணர வைத்திருக்கிறேன். ஆனாலும் இதை புதுசு என்று சொல்லமாட்டேன். என்கிறார்.


கதை பற்றி இயக்குநர் கூறும் போது, எல்லாச் சொற்களும் சொல்லப் பட்டு விட்டன. சொல்கிற வாய்கள் வேறு வேறு என்பார்கள். இந்த உலகத்தில் புதுசு என்று ஒன்றும் கிடையாது. அதற்கான மூலம் என்றைக்கோ உருவாகியிருக்கும். அது மட்டுமல்ல இந்த மறதி என்று ஒன்று இருக்கும்வரை எல்லாமே புதிதாகத் தெரியும் என்று நினைப்பவன் நான். கோணங்களை வித்தியாசப் படுத்தி கதை சொல்லியிருக்கிறேன். கதை புதிதாகத் தோன்றா விட்டாலும் என் கோணம் புதிது.பார்வை புதிது .அது நிச்சயம் ரசிக்க வைக்கும்..உணர்வுகளையும் நிகழ்வுகளையும் பற்றி மட்டுமே பேசும் யதார்த்தமான படம்தான் ரீங்காரம் "என்கிறார்.


படத்தில் நடித்த நடிகர்கள் பற்றிக் கூறும் போது, "ஒவ்வொருவரும் இயல்பு மீறாமல் யதார்த்தம் கெடாமல் நடித்திருக்கிறார்கள். கதாநாயகனாக புதுமுகம் பாலா. அவர் வேலையை சரியாகத் செய்து யதார்த்தத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். தூக்க முடியாத பாத்திரத்தைக் கூட தூக்கிக்கொண்டு நடந்திடலாம் ஆனால் கனமான கதாபாத்திரத்தை தூக்கிக்கொண்டு நடப்பது சுலபமல்ல. பாரத்தை முகத்தில் காட்டாமல் பாத்திரத்தை சுமந்து வாழ்ந்திருக்கிறார் கதாநாயகி பிரியங்கா. கங்காரு பிரியங்காவான அவர் ,இப்படத்துக்குப்பின் இனி ரீங்காரம் பிரியங்கா ஆகிவிடுவார். எப்போதுமே எரியும் நெருப்பாக கலாபவன் மணி .அடக்கமாக நடித்து ஆளுமை காட்டி அசத்தியுள்ளார். குத்திக் கிழிக்கிற கத்தி மாதிரி ஆடுகளம். ஜெயபாலன். பசங்க சிந்தியா அம்மாவாக உயிர் கொடுத்துள்ளார்.என்கிறார் .


இதுவரை 25 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார்கள்.


தமிழ் ரசிகர்கள் என்றும் புதுமையை ரசிப்பவர்கள். புதிய கதை சொல்லிகளை ஆராதிப்பவர்கள் ரீங்காரத்தையும் வரவேற்பார்கள்.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in