ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி | வாரணாசி : ராமர் Vs கும்பகர்ணன் கதை | 'சிங் கீதம்' படத்தில் நடிக்க ஆசைப்பட்ட கமல்ஹாசன் | ஓடிடியில் வரவேற்பைப் பெற்றுள்ள 'லீடர்' | அடுத்தடுத்து அறிவிக்கப்படும் புதிய படங்களின் வெளியீடுகள் | ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் பற்றிய கிளாமர் விமர்சனம் : மன்னிப்பு கேட்ட 'பெத்தி' இயக்குனர் |

மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோகர் இணைந்து நடித்துள்ள படம் 'இம்மார்ட்டல்'. இதில் டி.எம்.கார்த்திக், லொல்லு சபா மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளமை ததும்பும் காதல் கதையாக இப்படம் உருவானாலும் அதில் சஸ்பென்ஸ் கலந்த ஹாரர் கதையும் உள்ளது. ஒரே அபார்ட்மென்ட்டில் நடக்கும் கதையாக தயாராகிறது. ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதன் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக, பல்வேறு ஊர்களில் நடந்து வந்தது. இப்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. உடனடியாக போஸ்ட் புரொடக் ஷன் பணிகளையும் துவக்க உள்ளனர். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.