நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

ஸ்டண்ட் மற்றும் காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47) கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பொருளாதார சிக்கல்களுக்கிடையே மனைவியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் அவர் பலரிடம் உதவி கோரியிருந்தார். சமீபத்தில் தமிழக முதல்வர் விஜயிடமும் உதவி கோரி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் நேரில் மருத்துவமனைக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். சிகிச்சைக்கான உதவிகள் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், கடந்த 19 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை திடீரென சிகிச்சை பலனின்றி மாலதி காலமானார்.
அவரது உடல் இறுதி சடங்கிற்காக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா, சங்கம்பட்டி என்ற திருக்கோதையாபுரம் எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதிச்சடங்கு இன்று இரவு அவரின் சொந்த ஊரில் நடைபெறுகிறது.