ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் |

சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடிக்கும் 'கருப்பு' திரைப்படம் இன்று காலை 9 மணி காட்சியிலிருந்து வெளியாக வேண்டும். ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட நிதிச் சிக்கல் காரணமாக இன்று காலை காட்சி அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது.
காலை 11 மணிக்குள்ள சிக்கல்கள் தீர்ந்து நண்பகல் 12 மணி காட்சி முதல் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பைனான்சியர்கள் தரப்பில் இறங்கி வரவில்லை என்று தெரிகிறது. தங்களுக்குத் தரவேண்டிய மொத்த தொகையையும் தந்தாக வேண்டும் என அவர்கள் கறாராக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
தொகை பெரியது என்பதால் ஒரே நாளில் தயாரிப்பு நிறுவனத்தால் அதை புரட்ட முடியவில்லையாம். பேச்சு வார்த்தையில் குறிப்பிட்ட தொகையை பாக்கி வைத்து படத்தை வெளியிட்டுவிடலாம் என்பதும் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் 12 மணி காட்சி, 3 மணி காட்சி ஆகியவற்றையும் ரத்து செய்து டிக்கெட் கட்டணங்களைத் திருப்பித் தருகிறோம் என தியேட்டர்காரர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளனர்.
படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி வெளியிட்ட கண்ணீர் வீடியோவில் குறிப்பிட்டபடி படம் மாலை 6 மணி காட்சியாவது வெளியாகுமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.