Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

உங்களுக்கு ஒரு கேர்ள்பிரண்ட் இருந்தாரா ? ; மோகன்லால் மகனை மடக்கிய எஸ்தர் அனில்

14 மே, 2026 - 10:28 IST
எழுத்தின் அளவு:
Did-you-have-a-girlfriend-Esther-Anil,-who-beat-Mohanlals-son
Advertisement


மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'திரிஷ்யம்'. அதன் பிறகு வெளியான அதன் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது 'திரிஷ்யம்' படத்தின் மூன்றாம் பாகம் வரும் மே 21ம் தேதி ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. முதல் பாகத்தில் இருந்து மோகன்லாலின் இளைய மகள் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் எஸ்தர் அனில். இவர் அதற்கு முன்பாகவே மோகன்லால் நடித்த 'ஒரு நாள் வரும்' என்கிற படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார்.

அந்தச் சமயத்தில் படத்தின் தயாரிப்பாளர் மணியம்பிள்ளை ராஜு என்பவர், எஸ்தர் என்கிற பெயரை மாற்றி சினிமாவுக்காக வேறு பெயர் வைக்கலாமா என்று கேட்டுள்ளார். அதை உடனடியாக மறுத்த மோகன்லால் "எஸ்தர் என்பது நல்ல பெயர்தான், எனது மகன் பிரணவின் கேர்ள் பிரண்டின் பெயரும் கூட அதுதான்" என்று சொல்ல, அப்போது முதல் எஸ்தர் அனில் என்கிற பெயரே இவருக்கு நிலைத்து விட்டது.

அதன் பிறகு 'பாபநாசம்' படத்திலும் கமலுக்கு இளைய மகள் கதாபாத்திரத்தில் எஸ்தர் அனில் நடித்தார். அந்தச் சமயத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவியாளராக பிரணவ் மோகன்லால் பணியாற்றி வந்தார். அப்போது அவரிடம் சென்ற எஸ்தர் அனில் குறும்புத்தனமாக "உங்களுக்கு எஸ்தர் என்கிற கேர்ள் பிரண்ட் இருந்தாரா?" என்று கேட்க, ஆச்சரியப்பட்டுப் போன பிரணவ் "உனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்?" என்று கேட்டுள்ளார். அதற்கு "உங்கள் தந்தைதான் இந்த விஷயத்தை என்னிடம் சொன்னார்" என்று பதில் சொல்லி அவரை இன்னும் ஆச்சரியப்படுத்தியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் எஸ்தர் அனில்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தலாய்லாமாவிடம் குடும்பத்துடன் ஆசி பெற்ற ஜெயராம்தலாய்லாமாவிடம் குடும்பத்துடன் ஆசி ... நடிகர் சங்க பதவியில் இருந்து விலகிய 'திரிஷ்யம்' பட நடிகை நடிகர் சங்க பதவியில் இருந்து விலகிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap