பெரும் தொகைக்கு விற்கப்பட்ட த்ரிஷ்யம் 3
டிச 09, 2025
Advertisement
முதல் இரு பாகங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தற்போது "த்ரிஷ்யம்", மூன்றாம் பாகம் தயாராகி உள்ளது. முதல் இரு பாகத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். மோகன்லால், மீனா அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனில் ஜான்சன் இசையமைத்துள்ளார். சதீஷ் குரூப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளது. படம் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் தொகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து மோகன்லால் கூறும்போது “என் எண்ணங்களிலும், பார்வையாளர்களின் உணர்ச்சிகளிலும், வரிகளுக்கு இடையிலான அமைதியிலும் ஜார்ஜ்குட்டி கடந்த நான்கு வருடங்களாக என்னுடன் பயணிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பது புதிய ரகசியங்களுடன் என் பழைய நண்பரை சந்திப்பது போல உணர்கிறேன். இந்தமுறை அவரது பயணம் எங்கு செல்கிறது என்பதைப் பார்வையாளர்கள் பார்ப்பதற்காக நான் ஆவலாக உள்ளேன்” என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!