
மே 18ல் ராம்சரணின் பெத்தி டிரைலர் வெளியீடு
புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள படம் "பெத்தி". ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ஜூன் 4ம் தேதி படம் ரிலீசாகும் என ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மே 18ம் தேதி பெத்தி படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போபாலில் நடைபெறும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் நேரலை இசை நிகழ்ச்சியும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!