ராஷ்மிகா, கிரித்தி சனோன் படம் லெஸ்பியன் கதை இல்லை : இயக்குனர் விளக்கம் | ரவீணா டான்டன் தாயார் வீட்டில் 25 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு | சல்மான்கான் அனுப்பிய லீகல் நோட்டீஸ் ; 'காலா ஹிரண்' இயக்குனர் பதிலடி | இளையராஜாவின் பத்து.... தமிழ் திரை இசையின் முத்து... | நடிகர் சங்க முழு நிர்வாகமும் பதவி விலக வேண்டும் - மாலா பார்வதி ஆவேசம் | நான் உயிருடன் தான் இருக்கிறேன் ; வீடியோ வெளியிட்ட மம்முட்டி பட நாயகி | தமிழ் நடிகைகளை புறக்கணிக்கிறாரா மாரி செல்வராஜ்? | 'மட்பிஷ்' படத்தின் மூலம் மலையாள படத்தில் அறிமுகமாகிறார் கெனிஷா | ஹிப்ஹாப் ஆதி தயாரித்த “பொருநை” ஆவணப்படம்: சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு | 'மஞ்சணத்தி' படத்தில் இணைந்த பிரபலங்கள் |

உலக புகழ்பெற்ற ஸ்பை வெப் தொடர் 'சிட்டாடல்'. ஜோஷ் அப்பெல்பாம், பிரையன் ஓ மற்றும் டேவிட் வெய்ல் ஆகியோரால் இயக்கப்பட்டது. இதில் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் ரகசிய உளவாளிகளான நடித்துள்ளனர். வில்லன்களால் சிட்டாடல் டீம் அழிக்கப்படுகிறது. அதில் தப்பித்த சிலருக்கு பழைய நினைவுகள் மறந்து போகிறது. அவர்கள் தங்கள் நினைவுகளை மீட்டெடுத்து எதிரிகளை அழிப்பதுதான் முதல் சீசனின் கதை.
300 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 6 எபிசோட்கள் கொண்ட தொடராக இது தயாரிக்கப்பட்டது. இதுவரை தயாரான வெப் தொடர்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரானது இதுதான் என்கிறார்கள். முதல் சீசன் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. தற்போது இதன் இரண்டாவது சீசன் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது. ஆங்கிலத்துடன் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் காண கிடைக்கிறது. 7 எபிசோட்களை கொண்ட தொடராக வெளியாகி உள்ளது.




