Advertisement

சிறப்புச்செய்திகள்

லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரதீப் ரங்கநாதனின் 'எல்ஐகே' முதல் 'வாழ-2' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்

07 மே, 2026 - 04:32 IST
எழுத்தின் அளவு:
Pradeep-Ranganathans-LIK-to-Vaazha-2-are-this-weeks-OTT-releases
Advertisement


தமிழகத்தில் தேர்தல் ஜுரம் இன்னும் குறையாத நிலையில், தற்போது இந்த வாரத்திற்கான ஓடிடி ரீலீஸ் ஜுரமும் ரசிகர்களைத் தொற்றிக் கொண்டுள்ளது. இந்த வாரம் எந்தெந்த ஓடிடி தளத்தில் என்னென்ன படங்கள் வெளியாகவுள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

எல்ஐகே

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் 'எல்ஐகே'. பிரதீப் ரங்கநாதனின் கடந்த படங்களைக் காட்டிலும், சற்று குறைந்த வரவேற்பைப் பெற்ற இந்த படம் கடந்த 6ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஹிட்

கன்னட இயக்குநர் விஜயனாந்த் இயக்கத்தில் வெளிவந்த காமெடி திரைப்படம் 'சூப்பர் ஹிட்'. இந்த படம் நாளை(மே.8ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

லவ் மாக்டெயில்-3 (Love Mocktail-3)

கன்னட இயக்குநர் டார்லிங் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் 'லவ் மாக்டெயில்-3(Love Mocktail-3)'. இந்த படம் நாளை( மே.8ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

பரதநாட்டியம் 2: மோகினியாட்டம்

மலையாள இயக்குநர் கிருஷ்ணதாஸ் முரளி இயக்கத்தில் மலையாள நடிகர் சாய்ஜூ குரூப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் 'பரதநாட்டியம் 2: மோகினியாட்டம்'. காமெடி கலந்த த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படம் நாளை (மே.8ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

வாழ-2

மலையாள அறிமுக இயக்குநர் சவீன் எஸ்.ஏ இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'வாழ-2'. முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், நாளை(மே.8ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

ஓ பட்டர்ப்ளை (Oh Butterfly)

அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இயக்கத்தில், நடிகை நிவேதிதா சதிஷ், சிபி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'ஓ பட்டர்ப்ளை ( Oh Butterfly)'. இந்த படம் நாளை (மே.8ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

சாத்தான் : தி டார்க் (Satan: The Dark)

அறிமுக இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் எப்ஜே, ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் 'சாத்தான் : தி டார்க் (Satan: The Dark)'. இந்த படம் நாளை (மே.8ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

டகோயிட்: ஏ லவ் ஸ்டோரி' (Dacoit: A Love Story)

தெலுங்கு இயக்குநர் ஷனீல் தியோ இயக்கத்தில் அடிவி சேஷ் மற்றும் மிருணால் தாக்கூர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'டகோயிட்: ஏ லவ் ஸ்டோரி' (Dacoit: A Love Story)'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நாளை (மே.8ம் தேதி) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அரசியல் பதிவிட்டு விஜய்க்கு ஆதரவு கொடுத்த நடிகர் விஷால்அரசியல் பதிவிட்டு விஜய்க்கு ஆதரவு ... 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மோனிகா' பாடல் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap