Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்' கதை இதுதான்: இயக்குனர் தகவல்

07 மே, 2026 - 12:07 IST
எழுத்தின் அளவு:
This-is-the-story-of-Vishnu-Vishals-two-heavens-Directors-information
Advertisement


விஷ்ணு விஷால் காதல் படங்களில் நடிப்பது அபூர்வமானது. ஆக்ஷன், காமெடி மற்றும் கிரைம் திரில்லர் படங்களிலேயே அதிகம் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடித்து வரும் ரொமான்டிக் காதல் படம் 'இரண்டு வானம்'.'முண்டாசுப்பட்டி' மற்றும் 'ராட்சசன்' படங்களை இயக்கிய ராம்குமார் இயக்கி உள்ள படம். விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் இணையும் மூன்றாவது படம் இதுவாகும்.

மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளனர். இவர்கள் தவிர முனீஷ்காந்த், காயத்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. படம் பற்றி இயக்குனர் ராம்குமார் கூறியிருப்பதாவது: என் முதல் படம் 'முண்டாசுப்பட்டி' காமெடி, சின்னதாக சோஷியல் மெசேஜுடன் பீரியட் பேன்டசியாக அமைந்த படம். இரண்டாவது படம் 'ராட்சசன்' த்ரில்லராக உருவானது. இந்த படம் காதலை பின்னணியாக கொண்டு உருவாகி உள்ளது. சமூக நீதியை மிகவும் முக்கியமாக நினைக்கிற ஒரு பெண்ணும், வாழ்க்கையை எப்போதும் கலகலப்பாக, ஜாலியாக எடுத்துக்கொள்ள விரும்பும் ஒரு பையனும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். முரண்பாடுகள் மிக்க இவர்கள் எப்படி காதலிக்கிறார்கள், ஒன்று சேர்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

காதல் என்பதையே அறியாத ஒருவனுக்குக் கிடைக்கிற பெண்ணின் அன்பு அவனை எந்த அளவுக்கு மாற்றுகிறது, அதற்குப் பிறகு அவன் அந்தப் பெண்ணின் வாழ்க்கையை மாறுவதற்கு எப்படித் துணையாக இருக்கிறான் என்பதும் இதில் கதையாகிறது. வாழ்க்கையில் அன்பு கிடைக்கிற போது ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் மாற்றத்தை எதிர்கொள்ள முடிகிறது என்பதையும் இந்த படம் பேசுகிறது. என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'குடும்பஸ்தன்' சான்வே மேக்னாவின் 'காவியக் காதல்''குடும்பஸ்தன்' சான்வே மேக்னாவின் ... ஜெயலலிதா கொடுத்த செக்கை வாங்க மறுத்த ஆர்பி சவுத்ரி : நினைவுகளை பகிர்ந்த இயக்குனர் பாரதி கண்ணன் ஜெயலலிதா கொடுத்த செக்கை வாங்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap