
குடும்பஸ்தன் சான்வே மேக்னாவின் காவியக் காதல்
"மாவீரன், 3 பிஎச்கே" படங்களை தயாரித்த சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கும் படம் "காவியக் காதல்". ஹரிஹரசுதன் அழகிரி இயக்குகிறார். பாரத், சான்வே மேக்னா நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார், நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார்.
தெலுங்கு படத்தில் நடித்து வந்த சான்வே மேக்னா, "குடும்பஸ்தன்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றாலும் அடுத்து சரியான வாய்ப்புகள் அமையாததால் மீண்டும் தெலுங்கிற்கே சென்றார். சாய் அபயங்கரின் இசை ஆல்பம் ஒன்றில் பணியாற்றினார். இந்த நிலையில் "காவியக் காதல்" படத்தில் நடித்து வருகிறார். இது ரொமான்டிக் காமெடி படம்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!