Advertisement

சிறப்புச்செய்திகள்

நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி | 'அறம்' தயாரிப்பாளர் ராஜேஷ் நாயகனாக நடித்த 'அங்கீகாரம்' டிரைலர் வெளியீடு | டிக்கெட் உயர்வை அனுமதிக்க மாட்டோம்: தெலுங்கானா தியேட்டர் சங்கம் | என்னை யாரும் கண்டுகிடலை.. நொறுங்கிய என் ஈகோ: பெங்களூருவில் ரஜினிகாந்த் பேச்சு | 6 மொழிகளில் தயாராகும் சிலந்தி 2ம் பாகம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: நிஜ சம்பவத்தை தழுவிய கிரைம் திரில்லர்

07 மே, 2026 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Flashback-A-crime-thriller-based-on-a-true-story
Advertisement


லட்சுமி காந்தன் கொலை வழக்கு போன்று 'கருங்குழி பார்சல் கொலை வழக்கு' என்பதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த கொலை வழக்கை தழுவி எஸ்.ஏ.சாமி 'கருங்குயில் குன்றத்து கொலை வழக்கு' என்ற நாவலை எழுதினார். இந்த நாவல்தான் 'மரகதம்' என்ற பெயரில் திரைப்படமானது.

இதில் சிவாஜி கணேசன், பத்மினி, எஸ். பாலச்சந்தர், சந்தியா, டி.எஸ். பாலையா, டி.எஸ். துரைராஜ், ஜே.பி. சந்திரபாபு, ஓ.ஏ.கே. தேவர், பி.எஸ். ஞானம், டி.பி. முத்துலட்சுமி, லட்சுமிராஜம், லட்சுமிபிரபா, எம்.ஆர். சந்தானம், 'என்னத்தே' கண்ணையா மற்றும் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு இப்படத்தை இயக்கியிருந்தார். கோவையில் அமைந்திருந்த அவரது 'பக்ஷிராஜா' ஸ்டூடியோவில் படமானது.

கருங்குயில் குன்றத்து ஜமீன் கொலை செய்யப்படுகிறார். இந்த பழி அவரது மருமகன் வீணை பாலச்சந்தர் மீது விழுகிறது. அவர் சிறைக்கு செல்கிறார். பின்னர் அவர் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க சிறையில் இருந்து தப்பிக்கிறார். அவரது மனைவி சந்தியா (ஜெயலலிதாவின் தாய்), மகள் பத்மினி ஆகியோர் திசைக்கு ஒருவராக பிரிகிறார்கள். பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்த்து ஜமீனை கொன்றது யார் என்பதை ஜமீனின் இளவரசன் சிவாஜி கண்டுபிடிப்பதுதான் கதை.

காதலால் உருகும் சமையல்காரராக சந்திரபாபு நடித்த காமெடி காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றது. சந்திரபாபுவும் ஜமுனா ராணியும் இணைந்து பாடிய 'குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே' என்ற பாடல் இந்த படத்தில் இடம்பெற்றதுதான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராஷ்மிகாவின் 'மைசா' கேரள படப்பிடிப்பு நிறைவுராஷ்மிகாவின் 'மைசா' கேரள ... பிளாஷ்பேக்: விஜயகாந்திற்காக கதை எழுதிய இப்ராஹிம் ராவுத்தர் பிளாஷ்பேக்: விஜயகாந்திற்காக கதை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap