Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி சாலை விபத்தில் மரணம்

05 மே, 2026 - 06:36 IST
எழுத்தின் அளவு:
Producer-RB-Chowdhury-dead-in-accident
Advertisement

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

ராஜஸ்தானை பூர்விகமாக கொண்டவர் ஆர்பி சவுத்ரி. சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 90க்கும் அதிகமான படங்களை தயாரித்துள்ளார். தமிழில் இவர் தயாரித்த முதல் படம் ‛புது வசந்தம்'. தற்போது விஷால் நடிப்பில் 99வது படமாக மகுடம் படத்தை தயாரிக்கின்றனர். விரைவில் இவர்களது தயாரிப்பில் 100வது படம் உருவாக உள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு ஒரு திருமணத்திற்காக சென்றுள்ளார் சவுத்ரி. இவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளானது. அதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

‛‛புது வசந்தம், புரியாத புதிர், சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, கோகுலம், கேப்டன், நாட்டாமை, பூவே உனக்காக, சூர்யவம்சம், சொல்லாமலே, துள்ளாத மனமும் துள்ளும், நீ வருவாய் என, ஆனந்தம், சமுத்திரம், ஷாஜகான், வருஷமெல்லாம் வசந்தம், திருப்பாச்சி, ஜில்லா'' உள்ளிட்ட பல தமிழ் படங்கள் இவரது தயாரிப்பில் உருவானவையாகும். பெரும்பாலும் இவரது தயாரிப்பில் விக்ரமன், கேஎஸ் ரவிக்குமார் போன்ற இயக்குனர்களின் படங்கள் மற்றும் சரத்குமார், விஜய் ஆகியோரின் படங்கள் அதிகளவில் உருவாகி சூப்பர் ஹிட்டானவை என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்தவர் சவுத்ரி. அதேப்போல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் படங்கள் தயாரிப்பு மட்டுமின்றி நிறைய படங்களை விநியோகமும் செய்துள்ளார். ஆரம்ப காலத்தில் கொசுபத்தி தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார் சவுத்ரி. பின்னர் சினிமா மீதுள்ள ஆர்வத்தில் பட தயாரிப்பில் ஈடுபட்டார். தயாரிப்பு, விநியோகம் தவிர்த்து மற்ற படங்களுக்கு பைனான்ஸூம் செய்து வந்தார். சவுத்ரியின் மகன்களான ஜித்தன் ரமேஷ், ஜீவா ஆகியோரும் தமிழ் சினிமாவில் நடிகராக உள்ளனர்.

சவுத்ரியின் உடல் நாளை சென்னை கொண்டு வரப்படுகிறது. இறுதிச்சடங்கு சென்னையில் நடைபெறுகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
இன்னும் 30 நாட்கள் : பெத்தி புதிய போஸ்டர் வெளியீடுஇன்னும் 30 நாட்கள் : பெத்தி புதிய ... விஜய் பாதியை உண்மையாக்கி விட்டார், மீதிக்கு நான் கடுமையாக உழைக்க வேண்டும் : எஸ்.ஜே. சூர்யா விஜய் பாதியை உண்மையாக்கி விட்டார், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Real View - madurai,இந்தியா
06 மே, 2026 - 11:05 Report Abuse
Real View கொசுபத்தி தயாரித்தவர் சினிமா தயாரிப்பளார் ஆனார். சூப்பர்
Rate this:
SULLAN - chennai,இந்தியா
06 மே, 2026 - 10:05 Report Abuse
SULLAN கண்டிஷன பாலோவ் பண்ணுங்க பாலோவ் பண்ணுங்கன்னு சொன்னால் கேட்காம போயிட்டிங்களே?? கரூர் துயரம் உங்களுக்கு காமெடியா அண்ணா ?? பிறர்கின்னா முற்பகல் செயின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும் என்கிற வள்ளுவனின் வாக்கு பலித்து விட்டதே?? ரிசர்வ் பேங்க் சௌத்ரி என்று அழைக்கப்பட்ட தயாரிப்பாளர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஜீவா அண்ணா நடித்த கோ படம் நிஜமாகி இருக்கிறது திரு கே வி ஆனந்த் மெய்யாலுமே ஜீனியஸ்தான் கவண் கூட அற்புதமான படைப்புதான் அதில் பேசிய நுட்பமான அரசியல் கூட அவ்வளவாக கண்டு கொள்ளப்படவில்லை. மயக்கத்தில் இருக்கும் மக்களை எழுப்ப தேவை ஒரு சாட்டை.
Rate this:
DS -  ( Posted via: Dinamalar Android App )
06 மே, 2026 - 12:05 Report Abuse
DS RIP Chouthri Sir! So sad to hear this news!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap