
கருப்பு இசை வெளியீட்டு நிகழ்ச்சியைத் தவிர்த்த திரிஷா
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடித்துள்ள "கருப்பு" படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகியான திரிஷா கலந்து கொள்ளவில்லை.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை திரிஷா தவிர்த்தாரா அல்லது தயாரிப்பு நிறுவனமே அவரை வரவேண்டாம் என சொன்னதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சமீப காலமாக தவெக தலைவரும், நடிகருமான விஜய்யுடன் திரிஷாவை இணைத்து பேசி வருகிறார்கள். இருவரும் திருமணம் ஒன்றில் ஜோடியாகக் கலந்து கொண்டது அப்படியான பேச்சுக்களை உறுதி செய்வதாக இருந்தது.
நேற்றைய நிகழ்ச்சியில் திரிஷா கலந்து கொண்டால் மொத்த கவனமும் அவர் மீதே போகும், படத்தின் நாயகன் சூர்யா மீது இருக்காது என்பதால் அவரை வரவேண்டாமென தயாரிப்பு நிறுவனம் சொன்னதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்எப்படி இருந்தாலும் படம் ஊத்தி மொழுகப்போறது உறுதி.. அந்தம்மா வந்தா என்ன வராட்டி என்ன.. சங்கு சத்தம் கேக்குதய்யா சங்கூ சத்தம் கீக்குதய்ய்ய்ய்யா