கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

நடிகர் தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கர' திரைப்படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. நடிப்பு மட்டுமல்லாது டைரக்ஷனிலும் நுழைந்த தனுஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 'ப.பாண்டி' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். அதன் பிறகு ஒரு சிறிய இடைவெளி விட்டாலும் கடந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே 'ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை' என மூன்று படங்களை அடுத்தடுத்து டைரக்ட் செய்து வெளியிட்டார். அடுத்ததாக எப்போது டைரக்ஷன் பண்ணப் போகிறார் என்கிற கேள்விக்கு சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கர படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பதில் சொன்னார் தனுஷ்.
இது குறித்து தனுஷ் கூறும்போது , “அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமியின் படம், மாரி செல்வராஜ் டைரக்ஷனில் ஒரு படம், அப்புறம் லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து டைரக்ஷனில் ஒரு படம் என மூன்று இயக்குனர்கள் எனக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.. இதில் 'வடசென்னை 2' படமும் இருக்கிறது. இந்த படம் இந்த வரிசையில் எங்கே இடம் பிடிக்கும் என நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இவற்றையெல்லாம் முடித்துவிட்டு தான் டைரக்சன் பற்றி மீண்டும் யோசிக்க வேண்டும்” என்று கூறினார். அந்த வகையில் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு தனுஷ் டைரக்ஷன் பக்கம் கவனம் செலுத்த மாட்டார் என தெரிகிறது.