Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரீமாசென், தமன்னா வரிசையில் இடம்பிடிப்பேன்: ரோஸ்மின் நம்பிக்கை

21 ஏப், 2026 - 12:14 IST
எழுத்தின் அளவு:
Rosmin-confident-she-will-be-in-the-same-league-as-Reema-Sen-and-Tamannaah
Advertisement


மாடலிங் துறையில் அனைவருக்கும் அறிமுகமானவராக இருந்த ரோஸ்மின், சில மலையாள படங்களில் நடித்து விட்டு தற்போது 'பிரேக்பாஸ்ட்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். 'செல்லமே, ஆனந்த தாண்டவம்' படங்களை இயக்கிய ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி உள்ள படம்.

செல்லமே படத்தில் ரீமா சென், ஆனந்த தாண்டவம் படத்தின் தமன்னா உள்ளிட்ட பெரிய ஹீரோயின்களுக்கு பிளாட்பார்ம் அமைத்துக் கொடுத்தவர். அந்த வரிசையில் நல்லதொரு பிளாட்பார்ம் ரோஸ்மினுக்கு கிடைக்குமா என்பது இன்னும் ஒரு சில நாளில் தெரிந்து விடும். படம் வருகிற 24ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் படத்தில் நடித்திருப்பது பற்றி அவர் கூறியிருப்பதாவது: 'செல்லமே' படத்தில் ரீமா சென் கதாபாத்திரம் மிகவும் வலுவானது. அதேபோலதான், 'ஆனந்ததாண்டவம்' படத்திலும் அப்பாவியான அதேசமயம் வலுவான கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருப்பார். ரீமா சென், தமன்னா கதாப்பாத்திரங்கள் தான் கதையை நகர்த்தி செல்லும் வகையில் முக்கியமானதாக இருக்கும்.

இந்தப் படங்கள் மற்றும் கதாநாயகிகளின் கதாபாத்திரங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அதனால், காந்தி கிருஷ்ணா சாரின் படத்தில் எனக்கு கதாநாயகிக்கான வாய்ப்பு வந்தபோது மிகவும் மகிழ்ந்தேன். இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு பெருமை நானும் ரீமா சென், தமன்னா வரிசையில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

'பிரேக்பாஸ்ட்' படத்தில் பல உணர்வுப்பூர்வமான அதேசமயம் கியூட்டான ரொமான்டிக் தருணங்களுடன் கூடிய வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய பன்முக நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியிருக்கும் இந்த கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அவர்களும் என்னுடைய கதாபாத்திரத்தில் தங்களை பொருத்திப் பார்ப்பார்கள் என நம்புகிறேன். இந்த கதாப்பாத்திரம் நிச்சயம் அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
20வது தயாரிப்பை அறிவித்த தனுஷ்20வது தயாரிப்பை அறிவித்த தனுஷ் இயக்குனர் ஷங்கர் நடிக்கும் வாய்ப்பு…..நடக்குமா ? இயக்குனர் ஷங்கர் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap