சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் |

பாலிவுட் வில்லன் நடிகர் வித்யுத் ஜம்வால் தமிழில் 'துப்பாக்கி, அஞ்சான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஹாலிவுட் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள 'ஸ்ட்ரீட் பைட்டர்' என்கிற ஆக்சன் படத்தில் நடித்துள்ளார் வித்யுத் ஜம்வால். இந்த படத்தின் டிரைலர் வெளியீடு சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரத்தில் வருடந்தோறும் நடைபெறுகின்ற சினிமாகான் நிகழ்வில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நேரடியாக பங்கேற்ற நாயகன் வித்யுத் ஜம்வால் அங்கிருந்த சக ஹாலிவுட் நடிகர்கள் மத்தியில் காயத்ரி மந்திரம், சூரிய மந்திரம் மற்றும் சந்திர மந்திரம் ஆகியவற்றை சில நிமிடங்கள் கண்மூடி உச்சரித்தார். அங்கே இருந்தவர்கள் இதை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வித்யுத் ஜாம்வால், ''வார்த்தைகளை தாண்டி, மொழியை தாண்டி நாம் அனைவருமே ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளோம். உலகளாவிய நிகழ்ச்சி ஒன்றில் இப்படி ஒன்றை பகிர்ந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.