Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்த வார ஸ்பெஷல் : ஓடிடியில் தரமான சம்பவம் இருக்கு...!

16 ஏப், 2026 - 03:09 IST
எழுத்தின் அளவு:
This-weeks-special-Theres-a-quality-incident-on-OTT...!
Advertisement

தியேட்டரில் வாரா வாரம் புதுப்படங்கள் வெளியாவது போன்று, ஓடிடியிலும் புதுப்படங்கள் வெளியாகின்றன. இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்றால் ஆச்சரியமில்லை. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

யூத்
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் 'யூத்'. இந்த படத்தில் கென் கருணாஸே நாயகனாகவும் நடித்துள்ளார். அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி, சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளன. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலித்த நிலையில் இன்று(ஏப்.16ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

உஸ்தாத் பகத் சிங்
தெலுங்கு இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண், ஸ்ரீலீலா, மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் வெளியான திரைப்படம் ' உஸ்தாத் பகத் சிங். திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த திரைப்படம் தெலுங்கு, மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று(ஏப்.16ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

போச்சம்மா (Pochamma)
தெலுங்கு இயக்குநர் ரமேஷ் இந்திரா இயக்கத்தில் வெளிவந்துள்ள வெப் தொடர் 'போச்சம்மா (Pochamma)'. கிராமப்புற பின்னணியில், நம்பிக்கை மற்றும் ஒரு பழைய பங்களாவின் சாபத்தை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நாளை(ஏப். 17ம் தேதி) ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

சம்பவம் அத்தியாயம் ஒண்ணு (Sambhavam Adhyayam Onnu)
மலையாள இயக்குநர் ஜித்து சதீசன் இயக்கத்தில் அஸ்கர் அலி, வினீத் குமார் மற்றும் சித்தார்த் பரதன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சம்பவம் அத்தியாயம் ஒண்ணு(Sambhavam Adhyayam Onnu)'. கேரள - தமிழ்நாடு எல்லையில் உள்ள ஒரு காட்டில் காணாமல் போன போலீஸ் அதிகாரியைத் தேடிச் செல்லும் அதிகாரிகள், காலச் சுழற்சியில் சிக்கி மீண்டார்களா என்பது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நேற்று(ஏப்.15ம் தேதி) வெளியாகியுள்ளது.

ஆ கேங் ரேப்பு 3 (Aa Gang Repu 3)
தெலுங்கு இயக்குநர் யோகி குமார் இயக்கத்தில் ப்ரீத்தி சுந்தர், நரேன் அன்னசாகரம், சந்தீப் சாண்டில்யா மற்றும் தயானந்த் ரெட்டி நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் 'Aa Gang Repu 3'. கூட்டுப் பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் இன்று (ஏப்.16ம் தேதி) ஆஹா வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

மா இன்டி கதா (Maa Inti Katha)
தெலுங்கு இயக்குநர் ஸ்ரவன் தாமுலூரி இயக்கத்தில் உருவாகியுள்ள பேமிலி ட்ராமா வெப் தொடர் 'மா இன்டி கதா (Maa Inti Katha)'. இத்தொடர் நாளை(ஏப்.17ம் தேதி) ஈடிவி வின் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் திருமணநாளில் ‛அமர்க்களம்', பிறந்தநாளில் ‛பில்லா' ரீ ரிலீஸ்அஜித் திருமணநாளில் ‛அமர்க்களம்', ... 'ரேணிகுண்டா 2' மூலம் தமிழில் அறிமுகமாகும் திலகனின் பேரன் 'ரேணிகுண்டா 2' மூலம் தமிழில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap