'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

'மிஸ்டர் எக்ஸ்' படத்தில் ஒரு ரிஸ்க் காட்சியில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறாராம் ஆர்யா. அது குறித்து படத்தின் இயக்குனர் மனுஆனந்த் கூறியது: தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் முயற்சிக்காத ஒன்றை இந்தப்படத்தில் ஆர்யா செய்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் 30 முதல் 40 வினாடிகள் மூச்சை அடக்கிக்கொண்டு, உடலில் ஆடை இல்லாமல், பனிக்கட்டி போன்ற குளிர்ந்த நீரில் 20 அடி ஆழத்திற்கு இறங்கி ஒரு காட்சியில் நடித்துள்ளார்.
பெரும்பாலும் இந்திய சினிமாவில் இதுபோன்ற தண்ணீருக்கடியிலான காட்சிகள் ஆறு அடி ஆழத்தில் மூழ்கிய மேடைகளைப் பயன்படுத்தி தான் படமாக்கப்படுகின்றன. ஆனால் இதில் அது சாத்தியமில்லை. காரணம் அந்த காட்சியில் ஆர்யா ஆழமான கடலில் 20 அடி ஆழத்திற்கு உள்ளே செல்வது போல தத்ரூபமாக சித்தரிக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த ஆழம் தான் ஆர்யாவுக்கு உடல் ரீதியான மிகுந்த சவால்களை கொண்டு வந்தது. குறிப்பாக 15 முதல் 16 டிகிரி வரை இருந்த நீரின் வெப்பநிலை மிகவும் கடினமான சோதனையாக இருந்தது. கதைக்காக அந்தகாட்சியில் அவர் ஆடையின்றி நடித்துள்ளார்.
இந்த காட்சியை படமாக்க தேவையான சாதனங்களை. தண்ணீருக்குள் கொண்டு செல்வதற்காக திரும்பத் திரும்ப மேலே ஏறி கீழே இறங்குவதால் ஏற்படும் நேர விரயத்தை தவிர்ப்பதற்காக ஆர்யாவும் கேமரா குழுவினரும் ஒவ்வொரு முறையும் அதிக நேரம் தொடர்ச்சியாக நீருக்கடியிலேயே இருந்தனர். சில சமயம் அப்படி ஒன்றரை மணி நேரம் கூட நீருக்குள் இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்யா கூறுகையில், ‛‛நாம் ஆழமாக இறங்க இறங்க, நீரின் வெப்பநிலை குறைந்து 15 முதல் 16 டிகிரி வரை இருந்தது. ஆடையின்றி நடிக்கும்போது, உடல் நடுங்கக் கூடாது. 30 முதல் 40 வினாடிகள் மூச்சை அடக்கிக் கொண்டே நடுக்கத்தை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்தது” என்றார்.