Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி படத்தை இயக்குகிறாரா அஸ்வத் மாரிமுத்து? கமல் மீது கடும் கோபத்தில் ரஜினி ரசிகர்கள்?

13 ஏப், 2026 - 03:49 IST
எழுத்தின் அளவு:
Is-Ashwath-Marimuthu-directing-a-Rajinikanth-film-Are-Rajinikanth-fans-furious-with-Kamal
Advertisement


கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருந்த அவரின் 173வது படத்தை இயக்க முதலில் சுந்தர்.சி ஒப்பந்தம் ஆனார். ஆனால், சில கருத்து வேறுபாடுகள், சில பிரச்னைகள் காரணமாக அவர் விலகினார். ஆனால், அவரோ அடுத்த படங்களில் பிஸியாக இருந்ததால் ரஜினி படத்தை இயக்க முடியவில்லை என்றார்.

அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி ஒப்பந்தம் ஆனார். 2வது படமே, ரஜினி படமா என்று பலர் ஆச்சரியப்பட்டனர். அவரும் அந்த படத்துக்கான வேலைகளில் பரபரப்பானார். சில மாதங்களில் அந்த படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அவரும் அந்த படத்தில் இருந்து விலகப்போகிறார். ஏற்கனவே ரஜினிக்கு கதை சொல்லி அசத்திய அஸ்வத் மாரிமுத்து இயக்கப்போகிறார்.

இதற்கு காரணம், சிபி சக்ரவர்த்தியின் முந்தைய கமிட்மென்ட். அவர் ஒரு தெலுங்கு படம் இயக்க அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். அந்த படத்தை விட்டுதான் ரஜினி படத்துக்கு வந்தார். அந்த நிறுவனம் செக் வைக்க, அட்வான்ஸ் மற்றும் அந்த படத்துக்கான செலவுகளை திருப்பி கேட்க, வேறு வழியின்றி ரஜினி படத்தை விட்டு, அந்த நிறுவனத்துக்கே படம் பண்ணப்போகிறார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

இது குறித்த சிபி சக்ரவர்த்தியோ, கமல் நிறுவனமோ எதுவும் சொல்லவில்லை. ஆனால், விரைவில் இயக்குனர் மாற வாய்ப்பு. சுந்தர்.சிக்குபின், சிபியும் மாறப்போகிறார். என்ன நடக்குது என தெரியவில்லை என புலம்புகிறார்கள் ரஜினி ரசிகர்கள். ரஜினி மாதிரியான மாஸ் ஹீரோ படத்தை அஸ்வத் மாரிமுத்து மாதிரியான இயக்குனர்கள் இயக்கினால் எப்படி இருக்கும்? அஸ்வத் படத்தில் இளமை, போதை, கிண்டல், பெண்களை வம்பு இழுக்கும் சமாச்சாரங்கள் அதிகமாக இருக்கும். அதெல்லாம் ரஜினிக்கு செட்டாகுமா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.

கமலுக்கு கால்ஷீட் கொடுத்து இருக்கிறார் ரஜினிகாந்த். அதை அவர் சரியாக பயன்படுத்தவில்லை. இயக்குனர் தேர்வு, கதை தேர்வில் இவ்வளவு குழப்பங்களா? இந்த படம் எப்படி வருமோ? நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து ரஜினி கொடுத்த கால்ஷீட்டை கமல் கம்பெனி சரியாக பயன்படுத்த வேண்டும். அந்த படத்தை வெற்றி படமாக்க வேண்டும். அஸ்வத் மாரிமுத்து இயக்கினால் கூட, அந்த கதையை, சீன்களை கவனிக்க வேண்டும். சர்ச்சையை உருவாக்கிவிடக்கூடாது என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராஜன் வகையறா படப்பிடிப்பு தொடங்கியதுராஜன் வகையறா படப்பிடிப்பு ... உங்களுக்கு வந்தால் ரத்தம்.. எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நயன்தாரா மீது எழும் விமர்சனங்கள் உங்களுக்கு வந்தால் ரத்தம்.. ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap