தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் | பிரபுதேவா, வடிவேலுவின் ‛பேங் பேங்' படப்பிடிப்பு நிறைவு | ஜூலை 3ல் ரிலீசாகிறது 'கட்டா குஸ்தி 2' | 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர் | ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் |

கமல், சிம்பு நடிப்பில் இயக்கிய 'தக்லைப்' படம் மணிரத்னத்திற்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்த நிலையில், அடுத்தபடியாக விஜய் சேதுபதி நடிப்பில் தனது புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை லைகா மற்றும் இந்தியா டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
தற்போது இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் புரோமோ படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதோடு, தற்போதைக்கு புரொடக்ஷன் நம்பர்-23 என்று இந்த படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற மே மாதம் 14ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.