Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏப்ரல் 3 முதல் சதவீத முறைக்கு மாறும் தெலுங்கானா தியேட்டர்கள்

02 ஏப், 2026 - 02:44 IST
எழுத்தின் அளவு:
Telangana-Theatres-Shift-to-60-50-40-Revenue-Model
Advertisement


ஓடிடி தளங்கள் பிரபலமான பிறகு சினிமா தியேட்டர்களை நடத்துவதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என கடந்த சில வருடங்களாக தியேட்டர்காரர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

புதிய படங்கள் வெளியான நான்கு வாரங்களில் ஓடிடி தளங்களுக்குப் படங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, எட்டு வாரங்களுக்குப் பிறகே கொடுக்க வேண்டும் என்றும் சமீபத்தில் தென்னிந்திய தியேட்டர் உரிமையாளர்கள் சார்பாக நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அப்போது தெலுங்கானாவில் எதிர்காலத்தில் சதவீத முறையில் மட்டுமே படங்களைத் திரையிட வேண்டும் என்ற முடிவும் எட்டப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாளை முதல் ஹைதராபாத்தில் உள்ள 23 தியேட்டர்களில் சதவீத முறையில் மட்டுமே திரைப்படங்களைத் திரையிட உள்ளதாக தெலுங்கானா மாநில திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.

அதன்படி முதல் வாரத்தில் 60 சதவீதம், இரண்டாவது வாரத்தில் 50 சதவீதம், மூன்றாவது வாரத்தில் 40 சதவீதம் என்ற வகையில் வினியோகஸ்தர்கள் பங்கு தரப்பட உள்ளது. இது போகப் போக மாநிலம் முழுவதும விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காந்தாரா, ஹனுமன் அளவுக்கு ராமாயணா படத்துக்கு வரவேற்பு இருக்குமா?காந்தாரா, ஹனுமன் அளவுக்கு ராமாயணா ... ஏப்ரல் முதல் வார ஓடிடி ரிலீஸ் : அனைத்தும் புதுவரவுகள் தான்....! ஏப்ரல் முதல் வார ஓடிடி ரிலீஸ் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap