'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த சந்திரமுகி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பி. வாசு நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து இயக்கியுள்ளார். கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைக்கிறார் .
ஏற்கனவே இத்திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்தனர். இப்போது இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவு பெறாததால் செப்டம்பர் 28ம் தேதி அன்று திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற நாட்களில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.