பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! | அரசு ஆணையை நிறைவேற்றிய கர்நாடகா தியேட்டர்கள் | கென் கருணாஸ் படத்தின் புதிய தகவல் இதோ! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் அருந்ததி கதையின் நாயகி யார் தெரியுமா? | அதிக சலுகைகள் பெறும் நடிகர்கள்: ஆமிர்கான் காட்டம் | 'மிராய்' பட்ஜெட் 60 கோடிதானா? |
கங்கனா இயக்கி வரும் எமெர்ஜென்சி படத்தில் அவர் இந்திரா காந்தியாக நடிக்கிறார். இந்த படத்தில் சஞ்சய் காந்தியாக மலையாள நடிகர் விஷக் நாயர் நடிக்கிறார். அவரது தோற்றம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கங்கனா கூறியிருப்பதாவது : இந்திராவின் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர்களில் ஒருவர் சஞ்சய். அப்பாவித்தனமான முகமும் சாதுர்யமான செயல்பாடுகளையும் கொண்டவர். சஞ்சய் அவரது தாயின் நீட்சி. சஞ்சய் கேரக்டரில் நடிக்க 6 மாதங்களுக்கும் மேலாக ஒரு முகத்தைத் தேடினேன், தற்போது பொருத்தமானவரை கண்டுபிடித்து விட்டேன். ஒரு புதிய முகத்தை மிகப் பெரிய அளவிலான படத்தில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது அவரது முதல் இந்தி படம், சஞ்சயின் கதாபாத்திரத்திற்கு அவர் சிறந்த நீதியை வழங்குவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்கிறார் கங்கனா ரணவத்.