தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! | பிள்ளையார்சுழி போட்ட பிரேமி: மனம் திறந்த பிரியதர்ஷினி | நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! | பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் |
ஜென்டில்மேன், இந்தியன், சிவாஜி, எந்திரன் உட்பட பல தமிழ் திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். இவர் நேற்று மதியம் தனது வழக்கறிஞருடன் சென்னை ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அமலாக்கத்துறை சென்னை மண்டல அலுவலகத்தில் வழக்கு ஒன்றிற்காக விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறை துணை இயக்குநர் மல்லிகா அர்ஜுனா முன் ஆஜரான இயக்குநர் ஷங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர் .
பண விவகாரம் தொடர்பாக 3 மணி நேரம் இயக்குநர் ஷங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுது. ஆனால், அது என்ன வழக்கு என்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கூற மறுத்து விசாரணைக்கு பின்னர் வழக்கு குறித்த விவரங்களை தெரிவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள் .
இதற்கிடையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இயக்குநர் ஷங்கர் விசாரணைக்கு ஆஜரான தகவல் அறிந்து பல ஊடகத்தினர் அமலாக்கத்துறை அலுவலகத்தின் முன்பு ஒன்று கூடினர். ஷங்கர் தனது காரில் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஊடகத்தினர் குழுமியிருந்ததை அறிந்து கொண்ட இயக்குநர் ஷங்கர் விசாரணை முடிந்த பிறகு ஊடகத்தினரின் கண்ணில் படாமல் பின்வாயில் வழியாக வாடகை காரில் சென்றுள்ளார் .
இந்நிலையில் வழக்கு தொடர்பாக இயக்குநர் சங்கரை மீண்டும் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.