23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா |
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியவர். சமூகவலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சியான படங்களை பதிவிடும் இவர் அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.
தனது நீண்ட நாள் காதலர் சாம் பாம்பே என்பவரை கடந்த ஆண்டு இவர் திருமணம் செய்துகொண்டார். இருவரும் தேனிலவுக்காக கோவா சென்ற இடத்தில் தகராறில் ஈடுபட்டனர். கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக போலீசிலும் புகார் அளித்தார். பின்னர் இருவரும் சமாதானமாகி இணைந்தனர்.
இந்த நிலையில் பூனம் பாண்டே முகம் மற்றும் தலை, கண்களில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன் கணவர் சாம் பாம்பே தன்னை கொலை செய்யும் நோக்கில் தாக்கியதாக அவர் போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சாம் பாம்பே போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.