விமர்சனம்
எனும் திருக்குறளையும் காண்பித்து படத்தை முடிக்கிறார். அவர் காட்டும் திருக்குறளில் சொல்லிழுக்கப் பட்டு என முடிய வேண்டிய வார்த்தை இழக்கப்பட்டு என தவறாக வருகிறது!. அங்கு இழுக்கப்பட்டதாக இடம்பெற வேண்டிய வார்த்தை இழக்கப்பட்டு ஆனதும் தவறு, பின்பாதி படம் தேவையில்லாமல் இழுவையாக இழுக்கப்பட்டிருப்பதும் தவறு!.
மற்றபடி யாகவராயினும் நா காக்க எல்லா தரப்பு ரசிகர்களும் பார்க்க, ரசிக்க வேண்டிய தரமான படமாகும்!.
அப்பா தயாரிக்க, அண்ணன் (சத்திய பிரபாஸ்) இயக்க, தம்பி (ஆதி) நடித்த குடும்ப படம்!
தெரிந்தோ தெரியாமலோ சொல்லும் சில வார்த்தைகள், எதிராளியைக் காயப்படுத்தி எப்படி சிலரது வாழ்க்கையையே சின்னாபின்னமாக்குகிறது என்பதுதான் கதை!
ஒரு போதை தினத்தில் ஒரு பெண்ணை விளையாட்டுத்தனமாய் போட்டோ எடுக்கிறான் ஆதியின் நண்பன். மும்பை முதலியாரின் மகளான அவள் திடீரென கொல்லப்பட, கொலையாளி யார்? என்ன காரணம்? என்பதுதான் யா.நா.கா!
ஆறரை அடி உயர ஆதி கம்பீரம். ஆட்டம், ஆக்ஷன் என்று அதகளம் பண்ணுகிறார்.
நிக்கி கலகல ராணி! மிரட்டி மிரட்டி ஆதியைக் காதலிப்பது ரசனை.
ஆளைப் பாக்கறது, காதலிக்கிறது மட்டும்தான் ஆம்பளைங்க வேலை, அவனை வச்சுக்கலாமா கழட்டி விடலாமான்னு யோசிக்கிறது பொம்பளைங்க வேலை! - வசனத்தின் போது ஆண்கள் வலிக்க வலிக்க கைதட்டுகிறார்கள். மிதுன் சக்கரவர்த்தி நாயகன் வாசனையுடன் வருகிறார்.
ரிச்சா (இருக்கிறார்) பலோட்! அவரைக் கொன்றது யார் என்பது கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சஸ்பென்ஸ்.
அம்மாவாக வரும் பிரகதி ரொம்ப பாந்தம்.
திரைக்கதையும் எடிட்டிங்கும் கதையின் வேகத்தை இன்னமும் அதிகரிக்க வைக்கிறது. சண்முக சுந்தரத்தின் கேமரா - கூல்.
ஆதியின் பெற்றோர் விடுவிக்கப்பட்டதுமே படம் முடிந்துவிடுகிறது. அதற்குப்பிறகு ஏன் கதையை நகர்த்துகிறார்களோ யாமறியோம் பராபரமே!
யாகாவாராயினும் நாகாக்க - ஆக்ஷன் - ரியாக்ஷன்!
குமுதம் ரேட்டிங் - ஓகே
கல்கி திரை விமர்சனம்
யாகாவராயினும் நா காக்க
பாசத்தை மறைத்து வைத்திருக்கும் கண்டிப்புக்கார அப்பா, வௌ்ளந்தியான அம்மா, வெகுளியான சகோதரி.. இவர்களோடு, நண்பர்களுடன் சேர்ந்து பொறுக்கித்தனம் செய்யும் ஹீரோ, அவருக்கு ஒரு அடாவடிக் காதலி என்று தமிழ்த் திரைப்படங்களின் வழக்கமான கதாபாத்திரங்களைக் கொண்டதுதான் யா.நா. திரைப்படம். கதாபாத்திரங்களின் படைப்பு தான் அரதப்பழசு என்றால் கதையின் சம்பவங்கள் பலவும் ஏற்கெனவே பார்த்து தேய்ந்தவைதான்.
ஒரே தினத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பல பாத்திரங்களின் வாயிலாக வெவ்வேறாகக் காண்பித்திருக்கிறார்கள். காரில் நண்பர்களுடன் குதூகலமாகப் பாடிச் செல்லும் காட்சி, ஆண்டவன் படைச்சான்; என்கிட்ட கொடுத்தான் பாடலை நினைவூட்டுகிறது என்று சொல்லவருகிறீர்களா? பிளீஸ் நா காக்க.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மும்பையையே ஆட்டிப்படைக்கும் நல்லவர்/கெட்டவர் வேடத்தில் வருவதும், தாதாவுடைய வாரிசுகளுக்குச் சிக்கல் ஏற்படுவதும் அட நாயகன் கதைதானே என்று சொல்லக் கூடாது. நா காக்க!
பாடல்களும் பின்னணி இசையும் வெரைட்டியாக இருக்கின்றன. பாராட்ட வேண்டிய விஷயங்கள் என்று பார்த்தால், பாடல் காட்சிகளின் ஒளிப்பதிவு விளம்பரப் படங்களைப் போல் நேர்த்தியாகவும் துல்லியமாகவும் இருக்கிறது. சில பாடங்களின் அர்த்தம் புரிகிறது. மும்பை தாதா மிதுன் சக்கரவர்த்தியின் ஆர்ப்பாட்டமில்லாத கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவசரப்பட்டுப் பேசிவிடும் வார்த்தைகள் எப்படியெல்லாம் விபரீதங்களை வரவழைத்துவிடுகின்றன என்பதை அழுத்தமாகச் சொன்ன படம் இது.
நா காக்க - நல்ல மெஸேஜ்...














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!