விமர்சனம்
அ நிறம் | அளவு
காதல் தோல்வியால் மன அழுத்தத்திற்கு கவுன்சலிங் செய்து கொண்டிருக்கும் அர்ஜூன் தாசை, அவரின் கல்லுாரி ஜூனியரான அதிதி ஷங்கர் விரட்டி, விரட்டி காதலிருக்கிறார். முதலில் அதிதியை, அவர் டார்ச்சரை வெறுபவர், ஒரு கட்டத்தில் பழைய பிரச்னைகளில் இருந்து மீண்டு வந்து அதிதியுடன் செட்டாகிறார். திருமண நிச்சயதார்த்தம் நடக்கும்நாளில் உன்னை பார்க்கணும் என்று பல ஆண்டுகள் கழித்து மாஜி காதலி அர்ஜூன் தாஸ்க்கு போன் பண்ணுகிறார். அந்த பழைய காதலி யார்? அந்த காதல் ஏன் முறிந்தது. காதலி வரவுக்குபின் அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது. கடைசியில் யாரை திருமணம் செய்தார் அர்ஜூன் தாஸ். இதுதான் ஒன்ஸ்மோர் படத்தின் கதை.
பல படங்களில் ரவுடியாக, கொடூர வில்லனாக ரத்தம், வெட்டு, வன்முறை பாதையில் நடித்திருந்த அர்ஜூஸ்தாஸ் நடித்த பக்கா காதல் கதை. ஓரளவு அந்த கேரக்டரில் சிறப்பாக நடித்து இருக்கிறார் என்றே சொல்லலாம். முதற்பாதி முழுக்க கடுகடு முகத்துடன் காதல் தோல்வியில் பாதிக்கப்பட்டவராக வருகிறார். அவரை விரட்டி, விரட்டி வம்பு பண்ணுகிறார் அதிதி. சில சமயம் கோபப்படுகிறார். பல சமயம் அமைதியாக இருக்கிறார். இடையிடையே ஒரு டாக்டரிடம் மனநல கவுன்சலிங் போகிறார். அதிதி பிறந்தநாள் பார்ட்டியில் அவரை சிலர் வம்பு இழுக்க, அவர் பொங்கும் இடம் நல்ல நடிப்பு. இடைவேளைக்குபின் கேரளா , கல்லுாரி வாழ்க்கை, ஸ்டைலான மாணவர், சோனாவுடன் காதல் என அவர் கேரக்டர் மாறுகிறார். கிளைமாக்சில் காதலியா? அதிதியா என அவர் முடிவெடுக்கும் இடங்கள் ஓகே. முதற்பாதி அந்த சிடுசிடு கேரக்டர் அர்ஜூன்தாஸ்க்கு செட்டாகி இருக்கிறது. ஆனால், பிளாஷ்பேக்கில் வரும் கல்லுாரிமாணவன், காதல், இதெல்லாம் செட்டாகவில்லை. கிளைமாக்சிலும் நிறையவே ஏமாற்றியிருக்கிறார்
படத்தின் பெரிய பிளஸ் அதிதியின் அந்த துறுதுறு நடிப்பு, குறும்பு, படபடவென பேசும் அழகு. தனது கேரக்டர் தன்மை உணர்ந்து, ஆரம்பம் முதல் கடைசி வரை அவ்வளவு எனர்ஜியாக நடித்து இருக்கிறார் அதிதி. அவரின் காஸ்ட்யூம், ஹேர்ஸ்டைல், டான்ஸ் கூட பிரமாதம். அர்ஜூன்தாஸ் காதலியாக வரும் சோனா ஒலிக்கல் அழகாக இருக்கிறார். ஆனால், நடிப்பில் அனுபவம் இல்லாதததால் பல இடங்களில் அமைதியாக இருக்கிறார்
இரண்டாம் பாதியில் பெரும்பாலான இடங்களில் அர்ஜூன்தாஸ், சோனா காதல் காட்சி, அவர்களுக்கு இடையேயான பிரச்னை வருகிறது அதுதான், கதைக்கும் பிரச்னை. அது படத்துடன் ஒட்டவில்லை. ரொம்பவே நாடகத்தனமாக, சீன்கள் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. அந்த சீன்களை குறைத்து அதிதி, அர்ஜூன்தாஸ் சீன்களை அதிகரித்து இருந்தால் படம் ஓரளவு தப்பித்து இருக்கும். இவர்கள் மூவரை படத்தில் நிறையபேர் இருக்கிறார்கள். யாரும் மனதில் நிற்கவில்லை. இந்த கதையில் இரண்டு ஆண் நண்பர்கள் சம்பந்தப்பட்ட சீன் வருகின்றன. சிலருக்கு அது பிடிக்கலாம். பலர் அதை எதிர்க்கலாம்.
வழக்கம்போல் பெண்வீட்டார், மாப்பிள்ளை வீட்டார், நிச்சயதார்த்தம், திருமணம், அதில் திருப்பம் என கதை நகர்கிறது. அதெல்லாம் பல படங்களில் பார்த்து புளித்தது. பிற்பாதியில் வரும் அந்த கல்லுாரி போர்ஷன், கல்லுாரி மாணவர் கேரக்டர் அர்ஜூன்தாஸ்க்கு ஓட்டவே இல்லை. இதை விட முக்கியமான மைனஸ், அர்ஜூன்தாஸ், சோனா ஏன் பிரிந்தார்கள் என்பதற்கு வலுவான காரணம் சொல்லப்படவில்லை. ஏதேதோ சொல்லி சமாளித்து இருக்கிறார் இயக்குனர். அரவிந்த் விஸ்வநாதன் கேமரா பாடல் காட்சிகளை அழகாக்கி இருக்கிறது.
ஒன்ஸ்மோரில் உள்ள இன்னொரு பிளஸ்பாயிண்ட் ஹிருதயம் பட இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் பின்னணிஇசை, பாடல்கள். இரண்டிலும் அவர் நல்லதொரு உணர்வை கொடுத்து இருக்கிறார். காதல் படம் என்பதால் மெலோடி பாடல்கள், கதைக்கு ஏற்ப தகுந்த இடங்களில் வரும் பாடல்கள் காதுக்குள் ஒலிக்கிறது. அந்த படபட கண்ணம்மா இந்த ஆண்டின் சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கும்.
காதல் கதை, எத்தனையோ படங்களில் பார்த்த முக்கோண காதல் கதை, கிளைமாக்சிலும் புதுமை இல்லை. அதிலும் இடைவேளைக்குபின் பொறுமையை சோதிக்கும் கதை. இதுதான் நடக்கப் போகிறது என முதலில் பல விஷயங்கள் தெரிந்துவிடுகிறது. அதனால் டிராக் மாறி அர்ஜூஸ்தாஸ் நடித்திருந்தாலும், சில பிளஸ் இருந்தாலும் படத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை. காதல் கதையில் காதலும் சரியில்லை. கதையில் பார்வையாளர்களை இழுக்கும் எமோஷனும் இல்லை. பேசிக் கொண்டே, சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நமக்கு கொட்டாவி வருகிறது.
ஒன்ஸ்மோர் - ஒன்ஸ்மோர் பாக்க தோணல

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!