விமர்சனம்
----------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
நிவின் பாலி நடித்து மாலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த தட்டத்தின் மறயத்து படத்தின் ரீமேக் இது.
யதார்த்தமான, எளிமையான, மிகைப்படுத்தப்படாத, இப்படி ஒரு காதல் கதையைப் பார்த்து எத்தனை நாளாயிற்று! இயக்கம் யாரடி நீ மோகினி மித்ரன் ஜவஹர்.
முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் இந்து இளைஞனின் கதை. அவர்களின் காதல் திருமணத்தில் முடிந்ததா, இல்லையா? என்பதுதான் படம்.
புதுமுகம் வால்டர் பிலிப்ஸ் பொருத்தம். நடனமும் நன்று.
இஷா தல்வார் க்யூட். அந்த பதட்டமும், பயமும், காதலும் கொள்ளை கொள்கிறது.
படத்தின் பெரிய பலம் ஜி.வி. பிரகாஷின் பாடலும், ஆர். ஆரும், உன் இதயம், என் வசத்தில் பாடல் வசியம்! விஷ்ணுசர்மாவின் ஒளிப்பதிவு கூடுதல் பலம்.
சின்னச் சி்ன்ன காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. காரில் தனக்கு அருகில் காதலியை அமர வைக்க நாயகன் முயல, அதை நாசூக்காக நாயகி தவிர்ப்பது, காதல் கடிதத்துக்குப் பதிலாக புர்காவுடன் அமைந்த தன்னுடைய முகத்தை ஓவியமாக அனுப்புவது, உன் வீட்டில் நான் தொழுகை நடத்த ஓர் இடம் கிடைக்குமா? என கேட்பது எல்லாம் ஸ்வீட்.
மீ.ஒ.கா.க.: காதல் கவிதை!
குமுதம் ரேட்டிங்: ஓகே

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!