விமர்சனம்
குமுதம் விமர்சனம்
வடசென்னை வண்ணாரப்பேட்டை பேக்ரவுண்டில் சினிமாத்தனம் இல்லாமல் தரை லோக்கலாய் ஒரு படம்!
கையேந்தி பவன் வாசலில் ஓர் அரசியல் கொலை கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடியாததால் அங்கே சாப்பிட்ட வந்த பிரஜினின் நண்பனை உள்ளே வைக்கிறது போலீஸ். உண்மையான கொலையாளியை பிரஜின் அண்ட் கோ கண்டுபிடிக்க முயல, நண்பன் தப்பித்தானா என்பதுதான் கதை, இயக்கம் மோகன் ஜி.
வடசென்னை முகத்துக்கு பிரஜின் பொருத்தம். நண்பர்களும் அஃதே. காவல் அதிகாரியாக ரிச்சர்ட் மிடுக்கு. அஜித்தின் மச்சான் என்பதால் அங்கங்கே அஜித் பட மியூசிக் எல்லாம் போடுகிறார்கள் போல
யார் அந்த இன்ஸ்பெக்டர்? அவர் ஏதோ தவறானவர் போல நினைக்க வைத்து, ஒரு கட்டத்தில் இயலாமையில் அவர் பொங்குவது நேர்த்தி.
வண்ணாரப்பேட்டையை எந்தப் படத்திலும் இத்தனை முழுமையாகக் காட்டியதில்லை. பாரூக்கின் கேமரா நைட் டியூட்டி செய்திருக்கிறது!
ஜூபினின் இசையில் டிரம்ஸும் காதும் கிழிகிறது.
லோக்கல் ஸ்டேஷனில் சந்தேக கேஸ் ஆசாமிகளை எல்லாம் ஓர் அறையில் அடைத்து வைத்து விசாரணை தாண்டி நடக்கும் உரையாடல்கள் வித்தியாசம்.
யார் அந்தக் கொலையாளி என்று ஏகத்துக்கு பில்டப் கொடுத்து, கடைசியில்... சம்பந்தமே இல்லாமல் ஒருவர் இருப்பது சப்!
ப.வ.பே... - யதார்த்தம்.
குமதம் ரேட்டிங் - ஓகே














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!