கதைச் சுருக்கம்
----------------------------------------------------------------
குமுதம் சினிமா விமர்சனம்
ரன் லோலா ரன் டைப்பில் லோ லோ என்று அலையும் மூன்று பேரில் கதை.
காதலிக்குப் பெற்றோர் வேறு இடத்தில் திருமணம் நடத்த முயல, அதைத் தடுத்து, காதலியைக் கடத்த நினைக்கிறான் காதலன். இந்த ஒரே விஷயத்தை மூன்று விதமாகச் சொல்லியிருக்கிறார்கள். நேரம்!
அருள்நிதி, பிந்துமாதவி, பக்ஸ் என்று மூன்று களவாணிகளும் படம் முழுக்க ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். ஷூட்டிங் முடிவதற்குள் ஆளுக்குப் பத்து கிலோ குறைந்திருப்பார்கள்.
ஆறடி உயர அருள் ரொம்ப டீசண்ட். பிந்துமாதவி க்யூட். அவர் அத்தனை ஓட்டம் ஓடியும் அவரது தலைமுடிக்கு மட்டுமே க்ளோஸப் வைத்த கேமரா மேன், அனேகமாய் சபரிமலைக்கு மாலை போட்டிருக்க வேண்டும்! பக்ஸ், பணத்துல இவனுக்கும் பங்கு தரணுமா? என்று முட்டைக் கண்களுடன் ஒவ்வொரு முறை புலம்பும் போதும் பகபக!
டீக்கடையில் போலீஸ்காரர், ரவுடி முன்னால் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் புது வகை ரசனை.
கலர் கலர் துப்பாக்கி, க்ளைமாக்ஸில் இறந்து போகும் ஐந்து எறும்புகள் என்று சிம்புதேவனிடம் ஃபேண்டஸி இன்னும் கொஞ்சம் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. அர்ஷிதா ரெட்டி பளிச். நாஸர், அந்தோ பரிதாபம்!
ஓரே காட்சியமைப்பு, பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் மூன்றாவது முறையும் வரும்போது தியேட்டரில் நெளிகிறார்கள்.
ஒ.க.மு.க. - ஓவர் டோஸ்.
குமுதம் ரேட்டிங் - ஓகே
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!