விமர்சனம்
ஒளிப்பதிவு : அய்யப்பன்.N / இசை : சுமன்பிச்சு
பாடல்கள் : ஏகாதசி / கலை - ஸ்ரீனி
எடிட்டிங் : சாஜன்
நடனம் : சாந்தகுமார் / ஸ்டன்ட் - ரன்ரவி
தயாரிப்பு நிர்வாகம் : ஸ்ரீகுமார்
வசனம் : பொன். பிரகாஷ்
கதை : வினோத்லால்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு - சுரேஷ்
தயாரிப்பு : உல்லாஸ் கிளி கொல்லூர்
கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் - சந்தோஷ் கோபால்
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்.
தமிழ்நாடு, கேரளா இந்த இரு மாநிலங்களின் பார்டரில் இருக்கும் இரு வில்லன்களுக்கு இடையே நடக்கும் மோதல்கள்தான் இந்த படத்தின் திரைக்கதை. ஒரு தாதாவிடம் நட்பு வைக்கும் நாயகனின் குடும்பம் மற்றும் நாயகம் சந்திக்கும் பிரச்னை தான் கதை.
இந்த படத்திற்காக கலிங்கராஜ புரம் என்ற இடத்தில் இருபத்தைந்து லாரி புல்லுகட்டுகளை கொண்டு 60 அடி அகலம், 80 அடி நீளமும் கொண்ட பிரமாண்டமான அரண்மனை அமைக்கப்பட்டு அதில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. “ அடிடா மேள தாளம் பொறந்தாச்சு நல்லகாலம் “ என்ற அந்த பாடல் காட்சியில் நாயகன், நாயகி மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்குபெற சுமார் இருபது நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர் சந்தோஷ் கோபால்.














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!