விமர்சனம்
மொசக்குட்டி - குமுதம் விமர்சனம்
மைனா, சாட்டை எடுத்தவர்கள் அந்தப் படங்களை நினைவுப்படுத்துவது போல் எடுத்திருக்கும் படம் இது.
திருடனான ஹீரோ வீரா, தன்னுடைய திருட்டுப் பொருள்களை வாங்கும் மனிதர் வீட்டுப் பெண்ணையே களவாட முயல அந்தக் காதல் என்ன ஆச்சு என்பதுதான் மொசக்குட்டி.
மைனா நாயகன் போலவே வீராவும் ஒரு மாத தாடி, மூன்று மாத தலை முடி என்று இருக்கிறார். பேட் மேன் ஸ்டைலில் பறந்து திருடுவது வேடிக்கை. ஆனால் அதையே க்ளைமாக்ஸில் வைத்திருப்பது ரொம்ப ஓவர்.
சாட்டை மஹிமாதான் ஹீரோயின். கொஞ்சம் பாந்தம், கொஞ்சம் பாவம்.
வீராவிடம் ஆயிரக்கணக்கில் காண்டம் கொண்டு வரச் சொல்வதும், தாலி வாங்கி வரச் சொல்வதும் கலகலப்பு. (இயக்கம் ஜீவன்).
செண்ட்ராயனும் பாஸ்கரும் எப்போதாவது கிச் கிச்.
பசுபதியும், ஜோமல்லூரியும் பார்வையாலேயே மிரட்டுகிறார்கள்.
மைனா கேமராமேன் சுகுமார், இதிலும் காடு, மலை என்று சுற்றிக்காட்டி கண்ணுக்கு ஏ.சி. மாட்டுகிறார்.
கேரளாவுக்கு நாயகியை அழைத்துச் செல்வதெல்லாம் ஓகேதான். ஆனால் அங்கே ஏதோ பெரிதாக நடக்கும் என்று பெரிதாக நடக்கும் என்று எதிர்பார்த்தால் அல்பையாக இருக்கிறது.
மொசக்குட்டி - பாய்ச்சல் கம்மி
குமுதம் ரேட்டிங் - ஓகே














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!