விமர்சனம்
பாலைய்யா தனது நடிப்பில் மிளிர்கிறார். அதுவும் இரண்டு வெவ்வேறு கதாபாத்திரத்தில் நிறைவாக நடித்து இருக்கிறார். படத்தில் அவர் பேசும் வசனங்கள் அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை தரும். சண்டை காட்சிகளிலும் மிரட்டி இருக்கின்றார். திரிஷாவுக்கு என்றே உருவாக்கப்பட்ட வேடம் போலும். அந்த அளவிற்கு அவர் தனது நடிப்பாற்றலை வெளிக்காட்டி இருக்கிறார். அவருக்கும், பாலகிருஷ்ணாவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க் அவுட் ஆகி இருக்கின்றது. இரண்டு பாடல்கள் மற்றும் சில காட்சிகள் என்றாலும் ராதிகா ஆப்தே நிறைவாகவே நடித்து இருக்கிறார். பிரகாஷ்ராஜை பற்றி சொல்ல வேண்டிய தேவையில்லை. அவர் தனது பாணியில் அசத்தி இருக்கிறார்.
படத்தின் இசை அமைப்பாளர் மணி ஷர்மாவை பற்றி சொல்லியே ஆகவேண்டும். குறிப்பாக பின்னணி இசையில் நம்மை மெய் மறக்க செய்து விடுகிறார். பாடல்களுக்கு பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் நிச்சயம் நடனமே ஆடும் அளவிற்கு சிறப்பாக உள்ளது. புதிய கதைக்களத்தை வைத்துக்கொண்டு களத்தில் இறங்கிய அறிமுக இயக்குனர் சத்ய தேவ் சில இடங்களில் திணறி இருக்கிறார். அவரது அனுபவமின்மை தெரிந்து விடுகிறது. குறிப்பாக திரைக்கதையில் அவர் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். படத்தில் சஸ்பென்சுக்கு குறைவில்லை. பிரபல எடிட்டர் கொடகிரி வெங்கடேஸ்வர ராவ் இன்னும் கத்திரியில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படத்திற்கு சம்பந்தம் இல்லாத சில காட்சிகள் நீக்கப்பட்டு இருக்கும். பிரபல தயாரிப்பாளரான ருத்ரபடி ரமண ராவ் பட்ஜெட் விஷயத்தில் கவனமாக இருந்துள்ளது நன்கு தெரிகின்றது.
மொத்தத்தில் லயனின் கர்ஜனை மிரட்டவில்லை....














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!