விமர்சனம்
அ நிறம் | அளவு
உலகம் முழுவதும் வேருன்றி இருக்கும் வன்முறையையும், பயங்கரவாதத்தையும் அதை எதிர்த்து போராடுவதுமே காதல் வேதம் படத்தின் கதை. படத்தின் தலைப்பிற்கும், கதைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பது போன்று தோன்றும். ஆனால் இந்த காதலுக்கு பின்னால் பயங்கரவாதம் எந்த விதத்தில், அந்த காதலை நசுக்கப் பார்க்கிறது என்பதை வித்யாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் வினயன்.
முரளி கிருஷ்ணா என்ற புதுபுகம் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் கெளதம் என்ற கதாநாயகனும் நடிக்கிறார். "காதல் சொல்ல வந்தேன்" படத்தின் நாயகி மேக்னா சுந்தர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் திலகன், சாருஹாசன், லட்சுமி, ஜார்ஜ், கிரிஜா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரியனின் பாடல் வரிகளுக்கு சாஜன் மாதவ் இசையமைக்கிறார். இவர் இசையமைப்பாளர் ரவிந்தரனின் மகன். நவாஸ் ஒளிப்பதிவு செய்ய, இ.எம்.எஸ்.ராஜா வசனம் எழுதியுள்ளார். கதை, திரைக்கதை எழுதி இயக்குவதுடன் ஆகாஷ் பிலிம்ஸ் சார்பில் படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார் வினயன்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!