கதைச் சுருக்கம்
குமுதம் சினிமா விமர்சனம்
இந்தியா பாகிஸ்தான்
தலைப்பைப் பார்த்து விஜய் ஆண்டனியின் மற்றொரு க்ரைம் த்ரில்லர் படம் என்று போனால், ஒரே காமெடி. நாயகன் விஜய் ஆண்டனி ஒரு வக்கீல், நாயகி சுஷ்மா ராஜூம் வக்கீல். புரோக்கர்களின் தகிடுதனத்தில் அவர்கள் வக்கீல் என்பதை மறைத்து ஒரே வீட்டில் அலுவலகம் போடுகிறார்கள். உண்மை தெரியவர, தொழில் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்போல் எப்போது பார்த்தாலும் இருவருக்கும் ஒரே சண்டை. கதையும் அதுதான்.
விஜய் ஆண்டனி முதன்முதலாக காமெடி களத்தில் குதித்திருக்கிறார். ஜெகன், பசுபதி, எம்எஸ். பாஸ்கர், மனோபாலா ஆகியோர் கைகொடுத் தூக்கிவிட்டதால் ஹீரோ தப்பித்தார்.
நாயகி சுஷ்மாராஜ் அழகு. அனுஷ்கா சாயல் இருந்தாலும், நடிக்கவும் செய்கிறார். கிளாமரில் மிளிரவும் செய்கிறார்.
ஹீரோ ஹீரோயின் இந்தியா-பாகிஸ்தானாக இருக்க, அவர்கள் இன்னொரு காதலை சேர்த்துவைப்பது பழைய காட்சி. அந்த காதலுக்கு மரியாதை டி.வி.டி. மூலம் என்கவுண்டர் ரகசியத்தை கடைசிவரை கொண்டு வந்து, சிரிக்க வைத்துவிட்டார்கள்.
என்ஓம் ஒளிப்பதிவில் தன் பங்கு கச்சிதமாக செய்திருக்கிறார் பின்னணி இசை தீனா. தேவராஜன்... பரவாயில்லை.
இயக்குநர் ஆனந்த் சிரிக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். பசுபதி, பாஸ்கர் கிராமத்து பெரிய மனித சேட்டைகள் பழசு. ஆண்டனியையும் சுஷ்மாவையும் கிராமத்துக்கு அழைத்துப் போய் கேஸ் நடத்துவது பழசு என்றாலும் திரும்ப சென்னை கொண்டு வந்து ஷாப்பிங் மால்களில் கலகலக்க வைத்து விட்டார்.
இந்தியா - பாகிஸ்தான் காமெடி மேட்ச்.
குமுதம் ரேட்டிங் - ஓகே














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!