விமர்சனம்
குமுதம் விமர்சனம்
எனக்குள் ஒருவன்
எவன் தன்னோட வாழ்க்கையை வாழறான் இவனுக்கு அடுத்த வீட்டுக்காரன் பொண்டாட்டி மேல ஆசை. அவனுக்கு இவன் பொண்டாட்டி மேல ஆசை.. - படத்தில் வரும் கொச்சையான இந்த டயலாக்தான் கதையின் அடிநாதம்.
ஒரு டப்பா சினிமா தியேட்டரில் எடுபிடியாக இருக்கும் சித்தார்த் தன்னுடைய கனவில் மட்டும் பெரிய ஹீரோவாகத் தன்னை கற்பனை செய்து கொள்கிறார். ஒரு மாத்திரையின் உதவியால் அந்தக் கனவு தொடர, நிஜமும், நிழலும் சந்திக்கும் மையப் புள்ளிதான் எனக்குள் ஒருவன் இயக்கம் பிரசாத் ராமர்.
இரண்டு மாறுபட்ட பாத்திரங்கள். கறுப்பு நிறம், எத்துப்பல், தயக்கமான உடல் பாவம் என்று அந்த தியேட்டர் தொழிலாளி பாத்திரத்தில் குட்டிக் கமலாய் மிளிர்கிறார் சித்தார்த். மார்டன் கெட்டப்புக்குச் சொல்லவா வேண்டும்?
கனவுக் காட்சிகளை எல்லாம் கறுப்பு வௌ்ளையிலேயே காட்டியிருப்பது கவிதை.
சிலை மாதிரி இருக்கிறர் தீபா சன்னதி! நடிக்கவும் வருகிறது.
தியேட்டர் அதிபராக வரும் நரேனும் எந்த க்ளூவும் கிடைக்காத நிலையில் அஞ்சாமல் குற்ற முடிச்சை அவிழ்க்கும் மகேஷூம் கம்பீரம்.
சந்தோஷ் நாராயண் இசையில் கவிஞர் விவேக் எழுதிய பூ அவிழும்பொழுதில் ஓராயிம் கனா பாடல் இதயத்தை வருடுகிறது.
லூசியா என்ற பெயரில் கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த படம் அங்கங்கே கொஞ்சம் லூஸ் ஆகியிருக்கிறது. டைட் செய்திருக்கலாம்.
எனக்குள் ஒருவன் - சாமானிய ரசிகனுக்கு அன்னியன்!
குமுதம் ரேட்டிங் - ஓகே
தியேட்டர் கமெண்ட்: ஏண்டி, சித்தார்த்தைப் பிடிக்கும்னு என்னைப் படத்துக்குக் கூட்டிட்டு வந்தியே, கதை எனக்குப் புரியல. வீட்டுக்கு வந்ததும் முழுக்கதையையும் நீ எனக்குச் சரியாகச் சொல்லணும்!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!