விமர்சனம்
பேகம் ஜானாக வித்யாபாலன் நடிக்கவில்லை, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அதிலும் ஹூக்கா பிடித்தபடி அவர் காட்டும் தோரணை, வாழ்விடத்தை காப்பாற்ற அவர் காட்டும் ஆக்ரோஷம் எல்லாம் ஈர்க்கிறது.
வித்யாபாலன் உடன் கவுகர் கான், பல்லவி சரதா, ஆசிஷ் வித்யார்த்தி, நஸ்ருதின் ஷா, சங்கி பாண்டே... என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் படம் முழுக்க வித்யாபாலன் தான் தெரிகிறார். இருந்தாலும் அவரவர் அவர்களது ரோல்களை சரியாக நடித்திருக்கிறார்கள்.
பெங்காலியில் ராஜ்காஹினி படத்தை இயக்கிய ஸ்ரீஜித் முகர்ஜியே, பேகம் ஜான் படத்தையும் இயக்கியுள்ளார். முதல்பகுதி மெதுவாகவும், இடைவேளைக்கு பிந்தையபகுதி விறுவிறுப்பாகவும் நகருகிறது. படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள், அதை தவிர்த்து விட்டு பார்த்தால் இயக்குநர் தன் ரோலை சரியாக செய்திருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பலம். ஆனாலும் இசை, ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை காலக்கட்டத்தில், தன் வாழ்விடத்தை காப்பாற்ற ஆண்கள் துணையின்றி போராடும் பேகம் ஜானான வித்யாபாலனுக்காக ‛பேகம் ஜான்-ஐ ஒருமுறை பார்க்கலாம்.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!