விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

நடிகர் மோகன்லாலை பொறுத்தவரை கலை நிகழ்ச்சிகளுக்கு ரொம்பவே முக்கியத்துவம் தருபவர். குறிப்பாக நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதாகட்டும் அல்லது நடிகர் சங்க கொண்டாட்ட சமயத்தில் கலை நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்துவதுடன் அதில் ஒருவராக பங்கேற்று ரசிகர்களையும் மகிழ்விக்க கூடியவர். தற்போது மலையாளத்தில் அவர் படங்களில் பிஸியாக நடித்து வருகிர்டார்.
இந்த நிலையில் வரும் ஜூன் 26ம் தேதி ஜெர்மனியில் நடைபெற இருக்கும் பிரமாண்ட ஸ்டார் நைட் கலை நிகழ்ச்சியில் மோகன்லால் கலந்து கொள்ள இருக்கிறார். ஜெர்மனியில் ஒபர்ஹாசினில் உள்ள உள்ள ருடால்ப் வெபர் ஏரினா அரங்கில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட 150 பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை கடந்த ஏப்ரல் 15 முதல் சித்திரை வீசு பண்டிகையிலிருந்து தொடங்கியுள்ளது.




