மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

மலையாளத்தில் கடந்த 2024ல் 'வாழ' திரைப்படம் வெளியானது. 'குருவாயூர் அம்பல நடையில்' மற்றும் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விபின் தாஸ் கதை எழுதி இந்த படத்தை தயாரித்திருந்தார். பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பிரச்னைகள், அது குடும்ப உறவினர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றை மையப்படுத்தி வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் விபின் தாஸ் கதையிலேயே சமீபத்தில் வெளியாகி ஒரு வாரத்திற்குள் 100 கோடி வசூலை தொட்டு வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது சூட்டோடு சூடாக 'வாழ' படத்தின் மூன்றாம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தயாரிப்பாளரும் கதாசிரியருமான விபின் தாஸ் அறிவித்துள்ளார். முதல் இரண்டு பாகங்களும் ஆண்களை மையப்படுத்தி உருவாகி இருந்த நிலையில் மூன்றாவது பாகம் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி உருவாக இருக்கிறது.
இதைக் குறிக்கும் விதமாக ஒரு பில்லியன் பெண்களின் சுயசரிதை என இந்த படத்திற்கு டேக்லைன் கொடுத்துள்ளார்கள் மூன்று பாகங்களுக்கும் விபின் தாஸ் தான் கதை எழுதி இருக்கிறார் என்றாலும் கூட முதல் பாகத்தை இயக்குனர் ஆனந்த் மேனன் இயக்கினார். இரண்டாம் பாகத்தை சவின் எஸ்.ஏ என்பவர் இயக்கி இருந்தார். இந்த மூன்றாம் பாகத்தை விஸ்வன் ஸ்ரீஜித் என்பவர் இயக்க உள்ளார்.