
மோகன்லால் 366வது பட டைட்டில் அறிவிப்பு
ஏப் 16, 2026
Advertisement
கடந்த வருடம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கத்தில் வெளியான "தொடரும்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட 230 கோடிக்கு மேல் வசூலித்த இப்படத்தில் ஷோபனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் இயக்குனர் தருண் மூர்த்தியின் டைரக்ஷனில் புதிய படம் ஒன்றில் நடத்து வருகிறார் மோகன்லால். அவரது 366வது படமாக இது உருவாகி வருகிறது. இந்த படத்தில் "லவ் லாஜன்" என்கிற வித்தியாசமான பெயர் கொண்ட போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கு "அதிமனோகரம்" என டைட்டில் வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் மோகன்லால் சபரிமலை சன்னிதானத்தில் பாதுகாப்பு பொறுப்பில் இருக்கும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள போஸ்டர் அதை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!